search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தேசிய அணிக்கே முன்னுரிமை...சிஎஸ்கே அணியில் இருந்து பாதியில் வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்
    X

    தேசிய அணிக்கே முன்னுரிமை...சிஎஸ்கே அணியில் இருந்து பாதியில் வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்

    • அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு திரும்பிச் செல்வேன்.
    • மற்ற வீரர்களின் நிலை குறித்து இப்போதே கூற முடியாது.

    வெலிங்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இந்த சீசனில் அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடஉள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே ஏலம் எடுத்திருந்தது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    ஐபிஎல் தொடர் முடிவடைந்த 3 நாட்களில் இங்கிலாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றாலும் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கே முன்னுரிமை கொடுப்பேன் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:-

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றாலும் இங்கிலாந்து அணிக்காகவே விளையாடுவேன். அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு திரும்பிச் செல்வேன். அதற்கு போதுமான நேரம் கொடுப்பதையும் உறுதி செய்துகொள்வேன்.

    மற்ற வீரர்களின் நிலை குறித்து இப்போதே கூற முடியாது. ஆனால் அவர்களிடம் பேசுவேன். ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு அவர்கள் தயாராக இருக்க விரும்புகிறார்களா என்பதை கேட்டறிவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐபிஎல் தொடரில் இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், ஹாரி புரூக் உள்ளிட்டோரும் பல்வேறு அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 3-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    Next Story
    ×