search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய பிசிசிஐ
    X

    ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய பிசிசிஐ

    • 2017-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.
    • இந்திய அணி 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி வரை சென்றது.

    பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு கொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்ட பிசிசிஐ விருதுகள், 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடத்தப்பட்டது.

    பிசிசிஐ-ன் சிறந்த விருதான சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது முதன் முதலில் 1994-ல் வழங்கப்பட்டது. இது முன்னாள் வீரருக்கு பிசிசிஐ வழங்கும் மிக உயர்ந்த கவுரவமாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கடந்த 1981-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர் ரவி சாஸ்திரி. 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உள்பட 3830 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 206 ரன்கள் அடங்கும். இதே போன்று 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 18 அரைசதங்கள் உள்பட 3108 ரன்களும் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 109 ரன்கள் அடங்கும்.

    அதன் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இவர், பயிற்சியாளராக இருந்த போது இந்திய அணி 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் 2021-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரி விலகினார். அதன் பின் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

    Next Story
    ×