என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2வது ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
    X

    2வது ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

    • முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெறுகிறது.

    இந்தூர்:

    உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது. அதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.

    முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பிரசித் கிருஷ்ணா களமிறங்குகிறார்.

    இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    Next Story
    ×