என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டேவிட் வார்னர், மேக்ஸ்வெல் அதிரடி.. நெதர்லாந்துக்கு 400  ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
    X

    டேவிட் வார்னர், மேக்ஸ்வெல் அதிரடி.. நெதர்லாந்துக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

    • கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
    • தென் ஆப்பிரிக்கா அணியை நெதர்லாந்து வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    உலகக் கோப்பை 2023 தொடரின் 24-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ச் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்களை குவித்தார்.

    அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 68 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய லபுஷேன் 47 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்துள்ளது.

    நெதர்லாந்து சார்பில் லோகன் வான் பீக் நான்கு விக்கெட்டுகளையும், பாஸ் டி லீட் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆர்யன் டட் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    Next Story
    ×