search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை 2023: மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தம்
    X

    ஆசிய கோப்பை 2023: மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தம்

    • அரை சதம் விளாசிய ரோகித் சர்மா 53 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இலங்கை சார்பில் வெல்லாலகே ஐந்து விக்கெட்களை கைப்பற்றினார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் - சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். வேகப்பந்து வீச்சாளர்களை சுலபமாக எதிர் கொண்ட இருவரும் சுழற்பந்து வீச்சில் திணற ஆரம்பித்தனர்.

    சுப்மன் கில் 19 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி 3 ரன்னிலும் அரை சதம் விளாசிய ரோகித் சர்மா 53 ரன்னிலும் வெல்லாலகே ஓவரில் ஆட்டமிழந்தனர். 80 ரன்களில் விக்கெட் இழப்பின்றி விளையாடிய இந்திய அணி 91 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து இஷான் கிஷன் - கேஎல் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

    44 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த கே.எல். ராகுல் வெல்லாலகே ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வெல்லாலகே அவர் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை கைப்பற்றினார்.

    அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 4 ரன்களில் ஆட்டமிழக்க, ஜஸ்பிரித் பும்ரா 5 ரன்களையும், குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும், முகமது சிராஜ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 47 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்களை இழந்த நிலையில், 197 ரன்களை எடுத்துள்ள நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.

    இந்தியா சார்பில் அக்சர் பட்டேல் 15 ரன்களுடனும், முகமது சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை சார்பில் வெல்லாலகே ஐந்து விக்கெட்களை கைப்பற்றினார். இவர் தவிர சரித் அசலங்கா நான்கு விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

    Next Story
    ×