search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய அணி கேப்டன் பொறுப்பு: விளக்கம் அளித்த அஸ்வின்
    X

    இந்திய அணி கேப்டன் பொறுப்பு: விளக்கம் அளித்த அஸ்வின்

    • டெஸ்ட் கிரிக்கெட் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் கும்ப்ளேவுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார்.
    • அதிகமாக 5 விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சிறப்போடும் இருக்கிறார்.

    தரம்சாலா:

    டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகப்பெரிய சாதனைகளை செய்து அசத்தி வருகிறார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் கும்ப்ளேவுக்கு அடுத்த இடத்தில் இருந்தாலும், விரைவாக 500 விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர், அதிகமாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெரிய சிறப்போடு இருக்கிறார்.

    இந்நிலையில், தரம்சாலாவில் இந்திய பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    என்னிடம் நிறைய பேர் வந்து உங்களுக்கு ஏன் கேப்டன் பதவி கொடுக்கவில்லை என்பது பற்றி பேசி இருக்கிறார்கள். எனக்கு வந்த ஏற்றத்தாழ்வுகள் எனக்கு நிறைய புரிதலை உருவாக்கி இருக்கிறது. அதிலிருந்து நான் வெளியில் வந்து என்னை சமாதானம் செய்துகொண்டு விட்டேன்.

    கிரிக்கெட்டில் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு அடுத்த இடத்தில்தான் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எனக்கு முக்கியமான நேரங்களில் வாய்ப்புகள் கிடைக்காத பொழுது, எல்லாமே அணியின் நன்மைக்காகத்தான் என்று என்னை நானே சமாதானம் செய்வேன்.

    5 நாட்கள் முடிவில் அணி வென்றால் டிரெஸ்சிங் ரூமில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அணியை விட என்னுடைய சுயநலமான ஆர்வத்தை பெரிதுபடுத்த முடியாது என தெரிவித்தார்.

    Next Story
    ×