search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    லபுசேன், ஸ்மித், வார்னரை சாய்த்த இங்கிலாந்து: கவாஜா-ஹெட் ஜோடி ஆஸ்திரேலியாவை மீட்டெடுக்குமா?
    X

    லபுசேன், ஸ்மித், வார்னரை சாய்த்த இங்கிலாந்து: கவாஜா-ஹெட் ஜோடி ஆஸ்திரேலியாவை மீட்டெடுக்குமா?

    • லபுசேன் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்
    • ஸ்மித்தை எல்.பி.டபிள்யூ மூலம் பென் ஸ்டோக்ஸ் வீழ்த்தினார்

    ஆஷஸ் தொடரின் முதல் போட்டி நேற்று பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து ஜோ ரூட்டின் (118 நாட்அவுட்) அபார சதத்தால் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றயை முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் 8 ரன்னுடனும், கவாஜா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வார்னர் 9 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். பிராட் அடுத்தடுத்த பந்தில் விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்துக்கு முன்னணி கொடுத்தார்.

    நம்பிக்கை வீரரான ஸ்மித் அடுத்து களம் இறங்கினார். அவரை 16 ரன்னில் எல்.பி.டபிள்யூ மூலம் பென் ஸ்டோக்ஸ் வெளியேற்றினார். இதனால் 67 ரன்களுக்குள் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு கவாஜா உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டது.

    உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 40 ரன்களுடனும், ஹெட் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி சிறந்த பார்ட்னர்சிப் அமைத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் ஆதிக்கம் செலுத்தும். இல்லையெனில் நெருக்கடியை எதிர்கொள்ளும்.

    Next Story
    ×