search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20: உலக சாதனை படைத்த ரோகித் சர்மா
    X

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20: உலக சாதனை படைத்த ரோகித் சர்மா

    • முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இன்று நடைபெறும் போட்டியில் விளையாடுவதன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா புதிய உலக சாதனையை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 150 ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்று உள்ளார்.

    இதுவரை எந்த வீரரும் ரோகித் சர்மா அளவுக்கு அதிகமான போட்டிகளில் விளையாடியது கிடையாது. அவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 134 போட்டிகளில் பங்கேற்று 2-வது இடத்தில் உள்ளார்.

    இந்திய அணியை பொருத்தளவில் ரோகித்திற்கு அடுத்த இடத்தில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உள்ளார். அவர் 115 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2-வது இடத்தில் உள்ளார்.

    Next Story
    ×