என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி சேஸ் படத்தின் முன்னோட்டம்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் அடுத்ததாக நடிக்கும் திகில்  படத்துக்கு ‘தி சேஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்குகிறார். ஹரீஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், மோனிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.

    குறைந்த நடிகர்களை வைத்து தி சேஸ் படத்தை உருவாக்கி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு தாய், மகள் மற்றும் ஒரு இளைஞர் ஆகியோரை சுற்றி ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக உருவாக்கி உள்ளனர். 

    ரைசா

    ஊரடங்கில் படக்குழுவினருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்து எடுக்கப்பட்ட இந்த படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்கத்தில் கலையரசன் நடித்துள்ள ‘குதிரைவால்’ படத்தின் முன்னோட்டம்.
    யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கும் படம்  ‘குதிரைவால்’. கலையரசன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அஞ்சலி பாட்டீல் நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை பா.ரஞ்சித் வெளியிட உள்ளார். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஜி.ராஜேஷ் அமைத்திருக்கிறார். பிரதீப் குமார் மற்றும் மார்டின் விசர் இசையமைத்திருக்கிறார்கள்.

    கலையரசன்


    உளவியல், ஆள்மன கற்பனைகள் மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டு, மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இது இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாகவும், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாகவும் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கி உள்ளனர்.
    சந்திராம்பா தியேட்டர்ஸ் சார்பாக முத்து கிருஷ்ணன் தயாரிப்பில் ஆர்.ஜே.பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜதுரா’ படத்தின் முன்னோட்டம்.
    இந்தியாவில் முதல் முறையாக ரியல் டைம் வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் விர்சுவல் புரொடக்‌ஷன் முறையில் ஜதுரா என்ற திரைப்படம் படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. 

    ‘ஜதுரா’ படத்தை சந்திராம்பா தியேட்டர்ஸ் சார்பாக முத்து கிருஷ்ணன் தயாரித்து வருகிறார். ஆர்.ஜே.பார்த்திபன் இப்படத்தை இயக்குகிறார். வி.எப்.எக்ஸ் இயக்குனராக பெமில் ரோஜர் பணியாற்றுகிறார். ரட்சகன் ஸ்ரீதர் இசையமைக்கும் இப்படத்திற்கு மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஜெனிபர் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். மைக்கேல் ராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

    இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகளாக இருப்பவர்கள் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இவர்களின் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள். தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தி இருக்கிறார். 
    அறிமுக இயக்குனர் ரோஜர் டேனி இயக்கத்தில் சாகர், சாயாதேவி நடிப்பில் உருவாகும் ‘கேக்காது’ படத்தின் முன்னோட்டம்.
    கன்னட பட உலகின் கதாநாயகன் சாகர், ‘கேக்காது’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு வருகிறார். இவருக்கு ஜோடியாக இயக்குனரும் நடிகருமான ‘யார்’ கண்ணனின் மகள் சாயாதேவி அறிமுகமாகிறார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரதாப்போத்தன், மனோபாலா, ஏ.எல்.அழகப்பன், மயில்சாமி, வையாபுரி, நெல்லை சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள். டேனியல் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார், ரோஜர் டேனி. 

    படத்தைப் பற்றி இயக்குனர் ரோஜர் டேனி கூறியதாவது: “உலகம் எங்கும் அறிவியல் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. வெளிப்பயன்பாட்டுக்கு மட்டுமே இருந்து வரும் அறிவியல் வருங்காலத்தில், ‘சிப்’ வடிவில் மனித உடலுக்குள் புகுந்து ஆட்டுவிக்கப் போகிறது. இதற்கான வேலைகள் ஒரு நாட்டில் ரகசியமாக நடக்கிறது.

    சாயாதேவி, சாகர்

    இந்த உண்மையை கதாநாயகன் கண்டுபிடிக்கிறான். மனித உடலுக்குள் புகுந்து அறிவியல் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? என்ற உண்மையை அறிந்து அதிர்ச்சி அடைகிறான். அதன் பிறகு நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்கள், படத்தின் உச்சக்கட்டம். இந்த கதைக்குள் அரசியலும் இருக்கிறது.” என கூறினார்.
    நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் முன்னோட்டம்.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

    கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அதிரடி நகைச்சுவை படமாக தயாராகும் இதற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.நிர்மல் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
    நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சதுரங்கவேட்டை 2’ படத்தின் முன்னோட்டம்.
    கடந்த 2014-ஆம் ஆண்டு மனோபாலா தயாரிப்பில் நட்டி நடராஜ் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சதுரங்க வேட்டை’. அரவிந்த் சாமி நடிக்க  ‘சதுரங்கவேட்டை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.  இப்படத்தை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கி உள்ளார். முந்தைய பாகத்தின் இயக்குனர் வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். 

    இப்படம் தற்போது தினம் தினம் மெருகேறி வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகர்வாழ் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தில் நாசர், ராதாரவி, பொன்வண்ணன், ஸ்ரீமன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். மனோபாலா பிக்சர் ஹவுஸ் நிறுவனம் மூலம் மனோபாலா தயாரித்துள்ளார். 
    பரணி சேகரன் இயக்கத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தாழ் திறவா’ படத்தின் முன்னோட்டம்.
    பர்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘தாழ் திறவா’. அறிமுக இயக்குனர் பரணி சேகரன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சாலமன் போஸ் மற்றும் சபேஷ் கே.கணேஷ் ஆகியோர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளனர்.

    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: “ஒரு சின்ன ஊருக்குள் தொல்பொருள் சோதனை நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் நாகரிகம் ஒன்றை இவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக எப்படி ஒரு குழு சரி செய்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. சென்னை, ஊட்டி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இந்தப் படத்தின் கதையில் கிராபிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கும்” என கூறியுள்ளார்.
    ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பூமிகா’ படத்தின் முன்னோட்டம்.
    ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பூமிகா’. இதில் அவர் மனநோய் மருத்துவராக நடித்து இருக்கிறார். ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இப்படத்தை இயக்கி உள்ளார். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்புராஜ், சுதன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். 

    ஒரு கட்டிடத்தை கட்ட செல்லும் கட்டிடக்கலை நிபுணர்கள் அனைவரும் கொலை செய்யப்படுகிறார்கள். 10 வருடங்களாக அந்த கட்டிடத்தை யாராலும் கட்டி முடிக்க முடியாத நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கணவருக்காக துப்பறிந்து அங்குள்ள மர்மத்தை கண்டுபிடிப்பது, படத்தின் கதை. 

    படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: “இது, எனக்கு 25-வது படம். கனமான கதாபாத்திரம். துணிச்சல் மிகுந்த வேடம். டைரக்டர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் ஒரு நல்ல நண்பர். திறமையான டைரக்டர். பொதுவாக கதையும், கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன். அப்படி ஏற்றுக்கொண்ட படங்களில், ஓபூமிகா’வும் ஒன்று. படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடந்தது. இரவு-பகலாக வேலை செய்து, 35 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டோம்” என தெரிவித்துள்ளார்.
    ஆரவ், அஷிமா நர்வால், யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ராஜ பீமா’ படத்தின் முன்னோட்டம்.
    ஆரவ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ராஜ பீமா’. இப்படத்தை சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரிக்க இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். ஆரவ் மற்றும் அஷிமா நர்வால் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். நாசர், கே.எஸ்.ரவிக்குமார், யாஷிகா ஆனந்த், யோகி பாபு, ஷயாஜி ஷிண்டே, பாகுபலி பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    சைமன் கே கிங் இசையமைக்க, சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து தற்போது 95 பின்னணி வேலைகளையும் படக்குழுவினர் முடித்துள்ளனர். மிச்சமிருக்கும் பணிகளையும் மிக விரைவில் முடித்துவிட்டு, தியேட்டர்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்தவுடன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடிப்பில் உருவாகி இருக்கும் சக்ரா படத்தின் முன்னோட்டம்.
    விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். விஷால் இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார்.  

    படத்தைப் பற்றி ஆனந்தன் சொல்கிறார்: “இது, ஆன்லைன் வர்த்தகத்தில் நடக்கும் மோசடிகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். விஷாலிடம் கதையை சொன்னதும் அவருக்கு பிடித்து விட்டது. “இந்தப் படத்தை நானே தயாரித்து நடிக்கிறேன். கதாபாத்திரங்கள் எதையும் மாற்ற வேண்டாம். அப்படியே இருக்கட்டும்” என்று கூறிவிட்டார். ‘கதையில் வரும் பெண் போலீஸ் அதிகாரி வேடத்துக்கு யாரை தேர்வு செய்வது’ என்பதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. 

    சக்ரா படக்குழு

    கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஷ்ரத்தா பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தோம். கே.ஆர்.விஜயா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு பின்னணியும், முக்கியத்துவமும் இருக்கும். சென்னை மற்றும் கோவையில் படம் வளர்ந்து இருக்கிறது. இந்தப் படம், ஒரு தொழில்நுட்ப ‘த்ரில்லர்.’ விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் விருந்தாக இருக்கும்.”
    விவி இயக்கத்தில் ஆர்யன் ஷாம், ஆத்யா, லீமா பாபு நடித்துள்ள ‘அந்த நாள்’ படத்தின் முன்னோட்டம்.
    ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்க ஆர். ரகுநந்தன் கிரீன் மேஜிக் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் ‘அந்த நாள்’. வித்தியாசமான கதையமைப்போடு கிரைம், திரில்லர் கலந்த திகில் படமாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் விவி.
     இந்தப் படத்தில் ஆர்யன் ஷாம் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கான இறுதிக் கட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    விரைவில் வெளிவரவிருக்கும் அந்த நாள் படத்தில் கதை நாயகிகளாக ஆத்யா, லீமா பாபு நடித்துள்ளனர். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் புகழ் ராஜ்குமார், கைதி பட புகழ் கிஷோர், ஆகியோருடன் காமெடி வேடத்தில் இமான் அண்ணாச்சி நடித்திருக்கிறார். சதீஷ் கதிர்வேல் 
    ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு என்.எஸ். ராபர்ட் சற்குணம் இசையமைத்துள்ளார். 
    முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு, அறிமுக இயக்குனர் அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள காதம்பரி படத்தின் முன்னோட்டம்.
    அறிமுக இயக்குனர் அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் காதம்பரி. கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார்கள். மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு உருவாகி இருக்கும் படம் காதம்பரி.

    படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: இந்த படத்தின் தலைப்பை நயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான நானும் ரவுடிதான் படத்திலிருந்து நயன்தாராவின் பெயரான காதம்பரியை படத்தின் தலைப்பாக வைத்துள்ளேன். முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி இருக்கிறது. குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களை போன்று அல்லாது இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என கூறினார்.
    ×