என் மலர்

  சினிமா

  நாடோடிகள் 2
  X

  நாடோடிகள் 2

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் நாடோடிகள்-2 படத்தின் முன்னோட்டம். #Naadodigal2 #Sasikumar
  கடந்த 2009-ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

  இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் `நாடோடிகள்-2' உருவாகி வருகிறது. இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார்.

  இசை - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - ஏகாம்பரம், கலை - ஜாக்கி, எடிட்டிங் - ரமேஷ், பாடலாசிரியர் - யுகபாரதி, சண்டைப்பயிற்சி -  திலீப் சுப்புராயன், நடனம் - தினேஷ், ஜான், தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன், தயாரிப்பு - எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் - சமுத்திரக்கனி  இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பாடல் காட்சி ஒன்று பல லட்சம் ரூபாய் செலவில் படமாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Naadodigal2 #Sasikumar 

  Next Story
  ×