என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யூகி’ படத்தின் முன்னோட்டம்.
    அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'யூகி'. இப்படத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தென்னிந்திய நடசத்திர நடிகர்களான, பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    நட்டி, கதிர், நரேன்
    நட்டி, கதிர், நரேன்

    இப்படத்திற்கு பாக்கியராஜ் ராமலிங்கம் திரைக்கதை எழுதுகிறார், புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களுக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, டான் வின்சென்ட் பின்னணி இசையமைக்கிறார். பன்மொழிகளில் தயாராகும் இப்படம் கோவிட் பொது முடக்க காலத்தில், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் முறையாக கடைப்பிடித்து, சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் முன்னோட்டம்.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’  படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

    ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரம்
    ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரம்

    இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
    சிவி குமார் இயக்கத்தில் ராஜேஷ் கனகசபை, சந்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொற்றவை’ படத்தின் முன்னோட்டம்.
    வரலாற்று பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொற்றவை: தி லெகசி’ படத்தின் டீசர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘இது கதையல்ல, 2 ஆயிரம் வருட நம்பிக்கை’ என்று டீசரில் இடம் பெற்ற வசனம் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

    யுபிஎஸ்சி பயிற்சியாளராக இருக்கும் வடிவு, ஒரு கட்டத்தில் புதையல் ஒன்றை தேட ஆரம்பிக்கிறார். இந்தப் பயணத்தின் போது பல சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வடிவு ஏன் இந்த புதையல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார், அவருக்கும் புதையலுக்கும் என்ன தொடர்பு என்பதே கொற்றவை படத்தின் சாராம்சம்.

    இந்த திரைப்படம் பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என்று சி.வி.குமார் கூறுகிறார். படத்தை பற்றி அவர் மேலும் கூறுகையில், “இளம் வயது முதலே எனக்கு வரலாற்றில் ஆர்வம் அதிகம். எனது தந்தையின் அலுவலகத்தில் ஒரு சுற்றுலா வழிகாட்டியாக பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்ற போது வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். சினிமா துறைக்கு வந்தபோது சரித்திரப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்பொழுது அந்த ஆசை நிறைவேறியுள்ளது. கொற்றவையின் முதல் பகுதி ஒரு ஆரம்பம் மட்டும் தான். 70 சதவிகிதம் சமகாலமாகவும் 30 சதவிகிதம் வரலாற்று பின்னணியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் முழுக்க சாகசம் நிறைந்தவையாக இருக்கும்,” என்றார்.

    சி.வி.குமார்
    சி.வி.குமார்

    மயில் பிலிம்ஸ் டாக்டர் கே.பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு எழுத்தாளர் தமிழ்மகன் வசனம் எழுதியுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

    பிரமாண்ட பொருட்செலவில் மூன்று பாகங்களாக தயாராகி வரும் இப்படம் குறிப்பிட்ட இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகவுள்ளது. ‘கொற்றவை: தி லெகசி’ என்று பெயரிடப்பட்டுள்ள முதல் பாகத்தின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

    புதையல் வேட்டை தொடர்பான கதையாக அமைந்துள்ள கொற்றவையில், 2000 வருடங்களுக்கு முன் மறைக்கப்பட்ட புதையலை கண்டறிய நாயகன் எடுக்கும் சாகச முயற்சிகள் மெய்சிலிர்க்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன. ஏன் அந்த புதையல் மறைக்கப்பட்டதென்பதும் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.
    ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் வினோத் மோகன், பிந்துமாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாயன்’ படத்தின் முன்னோட்டம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில், ‘மாயன்’ என்ற பிரமாண்டமான திகில் படம் உருவாகி இருக்கிறது. ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் நடித்த வினோத் கதாநாயகனாக நடிக்க, பிந்து மாதவி, பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

    ஜான் விஜய், தினா, கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், கே.கே.மேனன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார், ராஜேஷ் கண்ணா. பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

    மாயன் படக்குழு
    மாயன் படக்குழு

    படத்தை பற்றி இயக்குனர் ராஜேஷ் கண்ணா கூறியதாவது: ‘‘மாயன் என்றால் காலபைரவனின் பிள்ளை என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஆக்குபவர்களும், அழிப்பவர்களும் மாயன்களே. அப்பேர்பட்ட மாயன்களுக்கும், நம் மூதாதையர்களுக்கும் புராண காலத்தில் ஒரு உறவு இருந்தது. இதுவே மாயன் படத்தின் கதைக்கரு’’ என்கிறார்.
    அறிமுக இயக்குனர் ஜி.பி.கார்த்திக் ராஜா இயக்கத்தில் கார்த்தீஸ்வரன், இனியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எர்ரர்’ படத்தின் முன்னோட்டம்.
    திலகா ஆர்ட்ஸ் சார்பாக எஸ்.டி.தமிழரசன் தயாரிக்கும் படம் ‘எர்ரர்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜி.பி.கார்த்திக் ராஜா இயக்குகிறார். இவர் தொலைக்காட்சிகளில் விஷ்வல் எடிட்டராக பணியாற்றியுள்ளார். இதுதவிர ‘பேய் இருக்க பயமேன்’ திரைப்படத்தில் துணை இயக்குனராகவும், எடிட்டராகவும் பணியாற்றினார்.

    ‘பேய் இருக்க பயமேன்’ படத்தின் நாயகன் கார்த்தீஸ்வரன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இனியா நடிக்கிறார்.பிரேம்ஜி அமரன் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேக் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது. 
    எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் சிரிஷ், மிருதுல்லா முரளி, அருந்ததி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் பிஸ்தா படத்தின் முன்னோட்டம்.
    மெட்ரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். மெட்ரோ படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அடுத்ததாக சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் பிஸ்தா. இந்த படத்தில் சிரிஷ் ஜோடியாக மிருதுல்லா முரளி, சைத்தான் படத்தில் நடித்த அருந்ததி நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். 

    பிஸ்தா படக்குழு
    பிஸ்தா படக்குழு

    கிராமப் பின்னணியில் காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். செந்தில், சதீஷ், யோகி பாபு, சென்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். இது அவர் இசையமைக்கும் 25-வது படமாகும். விஜயன் முனுசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். சமீபத்தில் வெளியான் இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.
    அறிமுக இயக்குனர் ஆர்.பி.சாய் இயக்கத்தில் விஷ்ணு பிரியன், மேக்னா எலன் நடிப்பில் உருவாகும் முதல் முத்தமே இறுதி முத்தம் படத்தின் முன்னோட்டம்.
    அறிமுக இயக்குனர் ஆர்.பி.சாய் இயக்கும் படம் ‘முதல் முத்தமே இறுதி முத்தம்’. இப்படத்தை ஜேசி மீடியா சார்பில் வசந்த குமார பிள்ளை மற்றும் கே.என்.முரளி கிருஷ்ணா தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளர்களாக மணிகண்டன், மகாதேவன் இணைந்துள்ளார்கள்.

    மோகன்ராம் இசையமைக்கும் இப்படத்திற்கு ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நாயகனாக விஷ்ணு பிரியனும், நாயகியாக மேக்னா எலனும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாம் ஆண்டர்சன், ரோஹித் பாலையா, எஸ்.கௌதம், ஜூனியர் டி.ஆர் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.

    மேக்னா எலன், விஷ்ணு பிரியன்
    மேக்னா எலன், விஷ்ணு பிரியன்

    இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: “அம்மாவுக்கு மகனுக்குமான பாசத்தை மையமாக வைத்து உருவாகும் படம் தான் ‘முதல் முத்தமே இறுதி முத்தம்’ என்கிறார் இயக்குனர்.

    இப்படத்தை பற்றி நடிகர் விஷ்ணுப்பிரியன் கூறுகையில், “நான் பாலுமகேந்திராவிடம் பணியாற்ற மிகவும் ஆசைப்பட்டேன் அந்த ஆசையை அவரது உதவி இயக்குனர் ஆர்.பி சாய் மூலம் இப்படத்தில் பணியாற்றுவதில் நிறைவேற்றிக் கொள்கிறேன் கோவையில் நடந்த சில உண்மை சம்பவங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
    ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா நடிப்பில் உருவாகி இருக்கும் ரைட்டர் படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, இரண்டு படங்கள் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதுடன் வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித்  தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் இயக்கும் ரைட்டர் படத்தினை தயாரிக்கிறார். 

    சமுத்திரகனி
    சமுத்திரகனி

    சமுத்திரக்கனி இந்த படத்தில் காவல்துறையில் பணிபுறியும் ரைட்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிகார மையத்தில் பணிபுரியும்  ஒரு எளிய மனிதனாக இயல்பான வாழ்வை வாழ்பவராக நடித்திருக்கிறார். ஹரிகிருஷ்ணன், இனியா, இயக்குனர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். யுகபாரதி, முத்துவேல் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.
    சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், மீனாட்சி, காளிவெங்கட், பாலசரவணன் நடிப்பில் உருவாகி இருக்கும் சிவ சிவா படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் ஜெய் நடிக்கும் 30-வது படத்துக்கு, ‘சிவ சிவா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் அவர் கதாநாயகனாக நடித்திருப்பதுடன், இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், காளிவெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், முக்தார்கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

    சிவ சிவா படத்தின் போஸ்டர்
    சிவ சிவா படத்தின் போஸ்டர்

    கவிஞர் வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி ஆகிய 3 பேர்களும் பாடல்களை எழுத, வேல்ராஜ் ஒளிப்பதிவில் படத்தை இயக்கியிருப்பவர், சுசீந்திரன். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. தமிழ் படத்தில் ஜெய்யும், தெலுங்கு படத்தில் ஆதியும் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்கள். எஸ்.ஐஸ்வர்யா தயாரித்து இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
    மதன் இயக்கத்தில் மூடர்கூடம் ராஜாஜி, சுஷ்மா ராஜ், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி உள்ள ‘டிக்டாக்’ படத்தின் முன்னோட்டம்.
    ஃபேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் 'டிக்டாக்'. இந்தப்படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன். 'எங்கிட்ட மோதாதே' படத்தை இயக்கிய ராமு செல்லப்பா இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். 

    மூடர்கூடம் ராஜாஜி, கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சுஷ்மா ராஜ் நடித்துள்ளார். இவர் இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர். மேலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர் மற்றும் டான் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சாம்ஸ், முருகானந்தம், வினோதினி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். 

    டிக்டாக் படக்குழு
    டிக்டாக் படக்குழு

    படத்தின் இசையமைப்பாளர் ஏ.கே.ரிஷால் சாய். ராட்சசன் படத்திற்கு படத்தொகுப்பு செய்த ஷான் லோகேஷ் இந்தப்படத்திலும் தனது கைவண்ணத்தை காட்டியுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோவையிலேயே நடைபெற்றுள்ளது. மேலும் பிரமாண்டமான பேய் வீடு செட் ஒன்றையும் அமைத்து அதில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். விரைவில் இந்தப்படத்தின் இசைவெளியீடு நடக்கவுள்ளது. படத்தை மார்ச் மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். 
    நந்தா பெரியசாமி இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ஷிவாத்மிகா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. குடும்பங்களை மையமாக வைத்து, உருவாகி உள்ள இப்படத்தை இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கி உள்ளார். ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பாக தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இப்படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

    கெளதம் கார்த்திக் ஜோடியாக ஷிவத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார். மேலும் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன்,  சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என பெரும் நடச்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. 

    ஆனந்தம் விளையாடும் வீடு படக்குழு
    ஆனந்தம் விளையாடும் வீடு படக்குழு

    சித்து குமார் இசையமைக்கும் இப்படத்துக்கு போரா பரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை சினேகன் எழுதி உள்ளார். ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 
    ரஞ்சித் பாரிஜாதம் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’ படத்தின் முன்னோட்டம்.
    மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு "சம்பவம்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடன இயக்குனர் தினேஷ், மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். 

    நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பங்கு பெறுகின்றனர். 

    தினேஷ், ஸ்ரீகாந்த்
    தினேஷ், ஸ்ரீகாந்த்

    நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தை ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். 
    ×