என் மலர்
சினிமா

மாயன் படத்தின் போஸ்டர்
மாயன்
ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் வினோத் மோகன், பிந்துமாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாயன்’ படத்தின் முன்னோட்டம்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில், ‘மாயன்’ என்ற பிரமாண்டமான திகில் படம் உருவாகி இருக்கிறது. ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் நடித்த வினோத் கதாநாயகனாக நடிக்க, பிந்து மாதவி, பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
ஜான் விஜய், தினா, கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், கே.கே.மேனன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார், ராஜேஷ் கண்ணா. பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

மாயன் படக்குழு
படத்தை பற்றி இயக்குனர் ராஜேஷ் கண்ணா கூறியதாவது: ‘‘மாயன் என்றால் காலபைரவனின் பிள்ளை என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஆக்குபவர்களும், அழிப்பவர்களும் மாயன்களே. அப்பேர்பட்ட மாயன்களுக்கும், நம் மூதாதையர்களுக்கும் புராண காலத்தில் ஒரு உறவு இருந்தது. இதுவே மாயன் படத்தின் கதைக்கரு’’ என்கிறார்.
Next Story






