என் மலர்
முன்னோட்டம்
மலையாளத்தில் பாரன்ஸிக் என்னும் பெயரில் வெளியான திரைப்படம் தற்போது தமிழில் கடைசி நொடிகள் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.
கேரளாவில் பாரன்ஸிக் எனும் பெயரில் வெளிவந்து சக்க போடு போட்ட படம் தமிழில் "கடைசி நொடிகள்" எனும் பெயரில் ரசி மீடியா மேக்கர்ஸ் உருவாக்கியுள்ளது. விஸ்வசாந்தி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் கொலைகாரனை கண்டுபிடிக்கும் பாரன்ஸிக் ஆபீஸராக டொவினோ தாமஸ் நடித்திருக்கிறார். மேலும் மம்தா மோகன் தாஸ், ரெபா மோனிகா, மோகன் சர்மா, பிரதாப்போத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வரிசையாக பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படை அமைக்கிறது. அதில் உதவியாளராக பாரன்ஸிக் ஆபீஸர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார். கொலைகளும் கொலை நடத்திய விதமும் ஒரே மாதிரி இருப்பதால் கொலைகாரன் ஒருவரே தான் செய்திருக்கனும் என்று அந்த பாரன்ஸிக் ஆபீசர் கண்டுபிடிக்கிறார்.
கண்டுபிடித்து போலீசிடம் சொன்னால் அவங்க ஏற்க மறுக்கிறார்கள். மெல்ல மெல்ல அந்த போலீஸ் துறையை நம்ப வைத்து அந்த கொலைகாரனை எப்படி பிடிக்கிறான் என்பது கதை. இப்படத்திற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஹாலிவுட் தரத்திற்குகொண்டு செல்கிறது. திரில்லர் என்றால் இதுதான் என்று ஒவ்வொரு காட்சிகளும் நெஞ்சை அள்ளிக் கொள்ளும் விதமாக "கடைசி நொடிகள்" உள்ளது.
ஒளிப்பதிவு - அகில் ஜார்ஜ், இசை - ஜேக்ஸ் பிஜோயி, வசனம் - ஏ.ஆர்,கே. ராஜராஜா, தமிழ் உருவாக்கம் - ரசி மீடியா மேக்கர்ஸ் தயாரிப்பு-கோபிநாத், கதை திரைக்கதை இயக்கம் - அனஸ்கான் - அகில்பால்.
2 எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் பிக்கப் படத்தின் முன்னோட்டம்.
பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடிக்கும் படம் பிக்கப். மேலும் இதில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, லட்சுமி பாலா, தீபிகா, குட்டி சரிதா, வெங்கய்யா பாலன், அகஸ்தியா என்று நட்சத்திரப்பட்டாளமே இதில் உள்ளது.
பவர்ஸ்டாரை மூன்றாவதாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறுகிறார் வனிதா. அந்தபங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து உருவாக்கி வருகிறார்கள்.
"பிக்கப்" படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி. இயக்கத்துடன் செமத்தியான பாடல்களுக்கு ட்யூன் போட்டு இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன். இந்தப் படத்தோட டைட்டிலில் வனிதாவுக்கு "வைரல் ஸ்டார்" என்ற பட்டத்தோடு பெயரை போடுகிறோம்" என்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன்.
இப்படம் சென்னை, பெங்களூர், மும்பை, மதுரை ஆகிய இடங்களில் படம் வளர்ந்து வருகிறது.
தங்கராஜு இயக்கத்தில் பாண்டி, முருகேசன், தெரிஷ் குமார், பிரித்வி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கம்பெனி’ படத்தின் முன்னோட்டம்.
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத கதைக்களத்தோடு உருவாகியுள்ள படம் ‘கம்பெனி’. கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பேருந்துகளின் முழு வடிவமைப்பு தொழிற்சாலை ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை தங்கராஜு இயக்க, ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் சார்பில் ஆர்.முருகேசன் மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
இப்படத்தின் நாயகர்களாக ‘கோலி சோடா’ புகழ் பாண்டி, முருகேசன் மற்றும் அறிமுக நடிகர்கள் தெரிஷ் குமார், பிரித்வி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த வளினா மற்றும் ‘திரெளதி’ படத்தில் நடித்த காயத்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கராத்தே வெங்கடேஷ், ரமா, சேலம் ஆர்.ஆர். பிரியாணி நிறுவனர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கம்பெனி படக்குழு
செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜூபின் பின்னணி இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பு பணியை ஜி.சசிகுமார் கவனிக்கிறார். மிராக்கல் மைக்கேல் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பெஞ்சமின் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். எம்.ஜி.பஞ்சாட்சரம் இணை தயாரிப்பு பணியை கவனிக்கிறார். கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘கம்பெனி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் நட்டி, ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘வெப்’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்திற்கு 'வெப்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். 'வேலன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் 'காளி' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார். 'எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்' படத்தில் நடித்த ஷாஸ்வி பாலா, 'முந்திரி காடு' & 'கண்ணை நம்பாதே' படங்களில் நடித்த சுபப்ரியா மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோர் மற்ற 3 நாயகிகளாக நடிக்கிறார்கள்.

நட்டி நட்ராஜ், ஷில்பா மஞ்சுநாத்
படத்தின் முக்கிய வேடங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.
பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
ஃபேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரிப்பில், பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “என்னங்க சார் உங்க சட்டம்”. பீச்சாங்கை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர்.எஸ்.கார்த்திக், இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
மேலும் ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குணா பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ள இப்படத்துக்கு அருண் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரகாஷ் கருணாநிதி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, டீஜே கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
சமீபத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. “என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படமும் இதே கதைகருவில் தான் உருவாகியுள்ளது. தமிழக அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாகவே, படக்குழு படத்தினை முடித்து, தணிக்கை (யு/ஏ) சான்றிதழையும் பெற்றுவிட்டது.

ஆர்.எஸ்.கார்த்திக்
இப்படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்தது, இரண்டாம் பகுதி ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகள் திவிரமாக சொல்வதாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் மேலும் ஒரு சுவாரஷ்யமான தகவல் என்னவென்றால், படத்தின் முதல் பகுதியில் 12 சிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் படத்தின் இரண்டாம் பகுதியில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.
எஸ்.எழில் இயக்கத்தில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் யுத்த சத்தம் படத்தின் முன்னோட்டம்.
நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களில், சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் எஸ்.எழில், முதல் முறையாக தன் பணியிலிருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படத்தை, இயக்கி வருகிறார். யுத்த சத்தம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், சாய் பிரியா தேவா, ரோபோ சங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஷ்வின் மற்றும் மற்றும் பல முக்கிய கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். கனல் கண்ணன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார்.
சுகுமார் கலை இயக்கம் செய்ய, முருகேஷ் பாபு வசனங்கள் எழுதுகிறார். யுகபாரதி பாடல் வரிகள் எழுத, தினேஷ், தினா மற்றும் அசோக் ராஜா நடன இயக்கம் செய்துள்ளனர். டி.விஜயகுமாரன் மற்றும் எழில் இணைந்து "யுத்த சத்தம்" படத்தை தயாரிக்கின்றனர்.
பயஸ் ராஜ் இயக்கத்தில் அஜிஜான், அக்ஷயா உதயகுமார், ஐ.எம்.விஜயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஷித்தி’ படத்தின் முன்னோட்டம்.
மலையாளம் மற்றும் தமிழில் வெளியாக இருக்கும் விருவிருப்பான திரைக்கதையை கொண்ட திரில்லர் படம் ஷித்தி. குற்றம் செய்த ஒருவனின் வாழ்க்கையோடும், மனதோடும் நடக்கும் சம்பவங்கள் விறுவிறுப்பான வகையில் படமாக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் இயக்குனரும், ஹீரோவான அஜிஜான் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்திய கால்பந்தாட்ட வீரர் ஐ.எம்.விஜயன் போலீஸ் அதிகரியாகவும், அக்ஷயா உதயகுமார், ஹரிதா ஹரிதாஸ் மற்றும் தனுஜா கார்த்திக் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை மகேஸ்வரன் நந்தகோபால் தயாரிக்கிறார். பயஸ் ராஜ் படத்தை எழுதி இயக்கி உள்ளார்.

அக்ஷயா
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் சுற்றுலா தலமான கோவளம், திருவனந்தபுரம் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. ஆழ் கடலிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்திற்கு ரமேஷ் நாராயன் இசை அமைத்துள்ளார்.
ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிப்பில் உருவாகி வரும் இடிமுழக்கம் படத்தின் முன்னோட்டம்.
தமிழ் திரையுலகில் சிறப்பான படைப்புகளை, தயாரித்து வரும் ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் “இடிமுழக்கம்”. இந்த திரைப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. கிராமத்து பின்னணியில் புதுமையான ஒரு திரில்லர் படமாக இப்படம் உருவாகிறது.
ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக காயத்திரி நடிக்கிறார் மேலும் சரண்யா பொன்வண்ணன், MS பாஸ்கர் அருள்தாஸ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். மலையாளத் திரையுலகில் பெரும் புகழை குவித்த, வினித் சீனிவாசன் அவர்கள் இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இயக்குனர் ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில் அமித் ஜாலி கதாநாயகனாக அறிமுகமாகும் லாக்டவுன் படத்தின் முன்னோட்டம்.
அங்கிதா புரொடக்ஷன் சார்பில் எஸ்.முரளி தயாரிப்பில் இயக்குனர் ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில் அமித் ஜாலி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் லாக்டவுன். இப்படத்தில் கதாநாயகியாக கீதா (சஹானா) அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் சுந்தரம் மாஸ்டர், பிரகாஷ் ராஜ், நேஹா சக்சேனா, துளசி, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர்.
படத்திற்கு இசை ஜாசி கிஃப்ட், ஒளிப்பதிவு - PK.H. தாஸ். படத்தொகுப்பு - சுரேஷ் அர்ஸ், சண்டை பயிற்சியாளர் ஜாலி பாஸ்டியன் மற்றும் ரவி வர்மா நடன இயக்கத்தை சின்னி பிரகாஷ் மற்றும் மதன் ஹரணி மேற்கொள்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அரண்மனை 3’ படத்தின் முன்னோட்டம்.
அரண்மனை பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வந்துள்ளன. சுந்தர்.சி இயக்கிய இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர்.சி தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.
இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு, மனோபாலா, சம்பத் ராஜ், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சத்யா இசையமைத்துள்ள இப்படத்திற்கு யு.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அரண்மனை 3 படக்குழு
திகில் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஃபெனி ஓலிவெர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். குரு ராஜ் கலை இயக்குனராகவும், பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளனர். இப்படத்தை அவ்னி சினிமாஸ் சார்பாக குஷ்பு தயாரித்துள்ளார்.
கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சூர்ப்பனகை’ படத்தின் முன்னோட்டம்.
ரெஜினா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘சூர்ப்பனகை’. கார்த்திக் ராஜு இயக்கி இருக்கும் இந்த படத்தில் மன்சூர் அலிகான், கிஷோர், அக்ஷரா கவுடா, ஜெய பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சரித்திர காலத்து கதையம்சத்தில் திகில் படமாக தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. நடிகை ரெஜினா இப்படத்தில் தொல் பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார்.

ரெஜினா
சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் கவனிக்கிறார். சீனு கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். ஆப்பிள் ட்ரி ஸ்டுடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா தயாரித்திருக்கும் இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பூமிகா’ படத்தின் முன்னோட்டம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பூமிகா’. இதில் அவர் மனநோய் மருத்துவராக நடித்து இருக்கிறார். ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இப்படத்தை இயக்கி உள்ளார். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்புராஜ், சுதன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். சசாரா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: “இது, எனக்கு 25-வது படம். கனமான கதாபாத்திரம். துணிச்சல் மிகுந்த வேடம். டைரக்டர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் ஒரு நல்ல நண்பர். திறமையான டைரக்டர். பொதுவாக கதையும், கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
அப்படி ஏற்றுக்கொண்ட படங்களில், பூமிகாவும் ஒன்று. படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடந்தது. இரவு-பகலாக வேலை செய்து, 35 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டோம்” என தெரிவித்துள்ளார்.






