என் மலர்
முன்னோட்டம்
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் முன்னோட்டம்.
தயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘துக்ளக் தர்பார்’. விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இப்படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார்.

பார்த்திபன், விஜய் சேதுபதி
மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குனர்கள் பணியாற்றிள்ளனர். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனங்களை எழுத, 96 படம் மூலமாக இயக்குனராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்கள். அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.
ருத்ரன் இயக்கத்தில் பாரதி கிருஷ்ணகுமார், அய்யநாதன் நடிப்பில் உருவாகி வரும் ‘2000’ படத்தின் முன்னோட்டம்.
ஃபீனிக்ஸ் திரைப்படைப்பகம் சார்பில் கோ.பச்சியப்பன் தயாரிக்க, ருத்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘2000’. இப்படத்தில் பிரபல பேச்சாளர் பாரதிகிருஷ்ணகுமார், ருத்ரன் பராசு, ஷர்னிகா, அரசியல் விமர்சகர் அய்யநாதன், பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா, தமிழ்த் தேசிய சிந்தனையாளர் தியாகு, ஊடகவியலாளர்கள் ஜென்ராம், உமா, ஜீவசகாப்தன் ஆகியோர் அறிமுகமாகின்றனர்.
மேலும் (பரியேறும் பெருமாள்) கராத்தே வெங்கடேஷ், (பிச்சைக்காரன்) மூர்த்தி, பிர்லா போஸ், ரஞ்சன், தர்ஷன், ஜாகுவார் நாதன், கற்பகவல்லி, (கவண்) பிரியதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் ஏற்பட்ட விளைவுகளை கருவாக வைத்து, இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் சிவக்குமாரின் சபதம் படத்தின் முன்னோட்டம்.
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சிவகுமாரின் சபதம். இப்படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்களின் பெரு வெற்றியை தொடர்ந்து, மூன்றாவது பாடலாக “நெருப்பா இருப்பான்” தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரொமாண்டிக் வகை பாடலை பத்மலதா பாடியுள்ளார். படத்தில் கதாநாயகி மாதுரி கதாநாயகன் ஆதியை காதலித்து, அவரது அழகை மற்றும் போற்றத்தக்க பண்பை, நினைத்து உருகி பாடுவதாக வரும் பாடல் இது.
ஹிப்ஹாப் ஆதி இப்படத்தில் நடித்து, இசையமைப்பதோடு, கதை, திரைக்கதை, பாடல்கள், எழுதி படத்தை இயக்கவும் செய்துள்ளார். அருண்ராஜா (ஒளிப்பதிவு), தீபக் S. துவாரகநாத் (படத்தொகுப்பு), சந்தோஷ் (நடன இயக்குனர்), ஸ்ரீஜித் சாரங் (கலரிஸ்ட்), வாசுதேவன் (கலை இயக்குனர்), Nectar Pixels Media (VFX), தபஸ் நாயக் (ஒலி கலவை), நிகில் மேத்யூஸ் (ஒலி பொறியாளர்), Sync Cinema (SFX), அமுதன் பிரியான் (டிசைன்ஸ்), அஸ்வந்த் ராஜேந்திரன் (நிர்வாக தயாரிப்பாளர்) ஆக பணியாற்றியுள்ளனர்.
டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் மாயோன் படத்தின் முன்னோட்டம்.
டபுள் மீனீங் புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாயோன்’. இப்படத்தில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி மற்றும் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
டபுள் மீனீங் புரடொக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து, திரைக்கதை எழுதி இருக்கிறார் அருண்மொழி மாணிக்கம். கிஷோர் இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மாயோன் படத்தில் சிபிராஜ் - தன்யா
விரைவில் இப்படத்தின் டிரைலர், இசை மற்றும் திரை வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
விஜய் கந்தசாமி இயக்கத்தில் சிவநிஷாந்த், நீருஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘துப்பாக்கியின் கதை’ படத்தின் முன்னோட்டம்.
பி.ஜி.பி. எண்டர்பிரைசஸ் சார்பில் பி.ஜி.பிச்சைமணி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘துப்பாக்கியின் கதை’. இயக்குனர் விஜய் கந்தசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவநிஷாந்த் என்பவர் ஹீரோவாக நடிக்க, பெங்களூருவை சேர்ந்த நீருஷா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் டேனியல், ஆர்.எஸ்.சிவாஜி, ஜார்ஜ், மிப்புசாமி, இலங்கை நடிகர் லால்வீர்சிங் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாய் பாஸ்கர் என்பவர் இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

துப்பாக்கியின் கதை படக்குழு
படத்தை பற்றி இயக்குனர் விஜய் கந்தசாமி கூறியதாவது: “ஆக்ஷன் த்ரில்லர் கதையம்சம் கொண்ட ‘துப்பாக்கியின் கதை’ திரைப்படம், குடும்பத்துடன் பார்க்கக் கூடிய, இளைஞர்கள் ரசிக்கக்கூடிய படமாக உருவாகி இருக்கிறது. படத்தின் கதை உண்மையிலேயே ஒருவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வை மையப்படுத்தி அதன் தாக்கத்தில் உருவான கதை தான். படம் பார்க்கும்போது இந்த நிகழ்வு எங்கே நடந்தது, யாருக்கு நடந்தது என்பதை ரசிகர்கள் நன்றாகவே தெரிந்து கொள்வார்கள்” என்றார்.
எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் கொம்புவச்ச சிங்கம்டா படத்தின் முன்னோட்டம்.
எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சசிகுமார், மடோனா செபாஸ்டியன்
1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, டான் பாஸ்கோ படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஸ்டண்ட் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்க, ராஜூ சுந்தரம் நடன இயக்குனராகவும், மைக்கேல்ராஜ் கலை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.
புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் படத்தின் முன்னோட்டம்.
நடிகர் சசிகுமாரின் அடுத்த படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

ராஜவம்சம் படக்குழு
மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகிறது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் T.D.ராஜா தயாரித்துள்ளார்.
ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் அக்ஷரா ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தின் முன்னோட்டம்.
கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் முதல்முறையாக ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் முதன்மை நாயகியாக நடித்துள்ளார். பிரபல பாடகி உஷா உதூப் அக்ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார். பெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப்படக்குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் நடிக்கிறார்கள்.
ராஜா ராமமூர்த்தி இயக்கி இருக்கிறார். ஷ்ரேயா தேவ் டூபே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுஷா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கீர்த்தனா முரளி மேற்கொண்டுள்ளார்.

அக்ஷரா ஹாசன்
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: சமூகத்தை பொருத்தவரை, ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்ற 4 பண்புகளும் ஒரு நல்ல பெண்ணின் தகுதியாக கருதப்படுகிறது. அப்படி நான்கு பண்புகளும் அமையப்பெற்ற ஒரு நல்ல பெண்ணை பற்றிய கதை இது. என கூறி உள்ளார்.
விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘இராவண கோட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
`மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு `இராவண கோட்டம்' என்ற படத்தை இயக்குகிறார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகி வருகிறது.

இராவண கோட்டம் படக்குழு
இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். படத்தின் கதை தட்பவெப்பநிலையைப் பொறுத்தது. ஆதலால், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.
சிவானி செந்தில் இயக்கத்தில் ராமச்சந்திரன், சிவகுமார், பாடினி குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் டேக் டைவர்ஷன் படத்தின் முன்னோட்டம்.
சென்னை டூ பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் 'டேக் டைவர்ஷன்'. இப்படத்தை இயக்குனர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார்.
பேட்ட, சதுரங்கவேட்டை படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக நாயகனாக சிவகுமார், நாயகியாக பாடினி குமார் நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். இவர்களுடன் ஜான் விஜய் தான் வில்லன். ஜார்ஜ் விஜய், பாலா ஜெ.சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜோஸ் பிராங்க்ளின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். படத்தொகுப்பு - விது ஜீவா.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்காக தேவா ஒரு கானா பாடலை பாடிக் கொடுத்து இருக்கிறார். இப்
படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், நடன இயக்குனர் சாண்டி ஆகியோர் வெளியிட்டார்கள்.
‘மெரினா புரட்சி’ நாயகன் நவீன், கதை எழுதி இயக்கியதோடு கதையின் நாயகனாக நடித்து இருக்கும் ‘வலியோர் சிலர்’ படத்தின் முன்னோட்டம்.
சி.ஜே.பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வலியோர் சிலர்’. இப்படத்தை ‘மெரினா புரட்சி’ நாயகன் நவீன், கதை எழுதி இயக்கியதோடு கதையின் நாயகனாக நடித்து இருக்கிறார். மேலும் கௌரி அனில்குமார், சுந்தர வடிவேலு, பிரசாத், பிரசாந்த் சீனிவாசன், விஜயலிங்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நடுத்தர இளைஞனுக்கும், போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் நவீன். போலீசிடம் பணத்தை பறிகொடுத்து, அதை அவர்களிடம் இருந்து மீட்க போராடும் இளைஞர் கதாபாத்திரத்தில் நவீன் நடித்திருக்கிறார். படத்தின் காட்சிகள் நடுத்தர இளைஞர்களின் வாழ்வில், அதிகார துஷ்பரயோகம் செய்யும் ஆளுமை கொண்ட போலீஸ் அதிகாரிகளின் செயல்கள் ஏதாவது ஒன்றை ஞாபகப்படுத்தும் என்கிறார் நவீன்.

வலியோர் சிலர் படக்குழு
இப்படம் வெளியாகும் முன்பே பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு, இதுவரை 7 சர்வதேச விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள், டிரைலர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.
அறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும் ‘தேஜாவு’ படத்தின் முன்னோட்டம்.
தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி, தற்போது 'தேஜாவு' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
‘தேஜாவு’ படத்தினை அறிமுக இயக்குநரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தினை வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்து வருகிறார். அவருடன் இனைந்து பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா இணை தயாரிப்பை மேற்கொள்வதுடன், ஒளிப்பதிவையும் கையாண்டு வருகிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, படத்தொகுப்பாளராக அருள் இ சித்தார்த் பணியாற்றி வருகிறார்.

அருள்நிதி
தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.






