search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரூ.3.5 கோடிக்கு புதிய சொகுசு கார் வாங்கிய நாக சைதன்யா
    X

    ரூ.3.5 கோடிக்கு புதிய சொகுசு கார் வாங்கிய நாக சைதன்யா

    • சென்னையில் இருந்து பொழுது "ஃபியட்" நிறுவனத்தின் "பேலியோ" காரைத் தான் முதலில் ஓட்டி பழகியதாக கூறினார்.
    • நாக சைதன்யா போர்ஸ்ர் சி 911 ஜிடி3 ஆர்எர் ஸ் என்ற காரை வாங்கியுள்ளார்.

    பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் தான் நடிகர் நாக சைதன்யா, ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும், தனது இளமை பருவத்தை பெரிதளவும் சென்னையில் கழித்தவர் அவர். நடிகர் நாக சைதன்யா 2009ம் ஆண்டு வெளியான ஜோஷ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

    சமீபத்தில் இவர் நடித்த படம் 'கஸ்டடி'. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கினார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்தது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார்.


    பிரபல தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கார்கள் மீது தனக்குள்ள ஈடுபாடு குறித்தும் சென்னையில் தான் தனக்கு கார்கள் மீதான ஒரு ஈர்ப்பு துவங்கியது என்றும் கூறி மனம் திறந்து உள்ளார். கார்கள் தான் தனக்கு முதல் காதலி என்று கூறிய நாக சைதன்யா சென்னையில் இருந்து பொழுது "ஃபியட்" நிறுவனத்தின் "பேலியோ" காரைத் தான் முதலில் ஓட்டி பழகியதாக கூறினார்.

    அதன் பிறகு தனது 19 வது வயதில் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்த அவர் பல சூப்பர் பைக்குகளை ஓட்டி பழகிய பின், "மிட்சுபிஷி" நிறுவனத்தின் "லான்சர்" என்ற காரைத் தான் வாங்கி ஒட்டியதாக கூறியிருக்கிறார். இன்றளவும் இந்த கார்களுக்கு மவுசு உள்ளது குறிப்பிடத்தக்கது.


    நாக சைதன்யாவிடம் பெராரி முதல் பிஎம்டபிள்யூ வரையிலான ஈர்க்கக்கூடிய சொகுசு கார்களின் சேகரிப்பு உள்ளது. தற்போது அந்த சேகரிப்பில் புதிய கார் ஒன்றை சேர்த்துள்ளார். தற்போது நாக சைதன்யா போர்ஸ்ர் சி 911 ஜிடி3 ஆர்எர் ஸ் என்ற காரை வாங்கியுள்ளார்.

    கார்ட்ரேட் படி, இந்தியாவில் காரின் முந்தைய ஷோரூம் விலை ₹3.51 கோடி. இது மே 17 அன்று பதிவு செய்யப்பட்டது மற்றும் ஹைதராபாத்தில் முதல் போர்ஷே 911 GT3RS என்று கூறப்படுகிறது. சென்னை போர்ஸ் சென்டர் சைதன்யா காருடன் போஸ் கொடுக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

    இதனை நாக சைதன்யா ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.



    Next Story
    ×