என் மலர்
கிசுகிசு
சதுரங்கத்தில் வேட்டையாடிய நடிகை, சில நாட்களாக தலைமறைவாகி விட்டதாக ஒரு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் புகார் கூறி இருந்தார்களாம்.
சதுரங்கத்தில் வேட்டையாடிய நடிகை, சில நாட்களாக தலைமறைவாகி விட்டதாக ஒரு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் புகார் கூறி இருந்தார்களாம். இதற்கு பதில் அளித்துள்ள நடிகை, இயக்குனர் கண்ணியத்துடன் நடந்து கொள்ளவில்லை. கொடுத்த கால்ஷீட்டை சரியாக பயன்படுத்தவில்லை. சட்டரீதியாக சந்திப்பேன் என்று கூறியிருக்கிறாராம். இதனால் நடிகைக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறதாம்.
விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்துள்ள ரூபமான நடிகை, வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். இவர் நடித்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையாம்.
விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்துள்ள ரூபமான நடிகை, வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். இவர் நடித்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையாம். மேலும் இவருக்கு கொல்லிமலையில் சொந்தமாக மிகப்பெரிய பண்ணை வீடு இருக்கிறதாம். இந்த வீட்டில் பசுமாடுகள், குதிரைகள், ஒட்டகங்கள் மற்றும் பறவைகளை வளர்த்து வருகிறாராம். தற்போது புதிதாக கோழிப்பண்ணை ஒன்றை தொடங்கியிருக்கிறாராம்.
தயாரிக்கும் படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவுவதால் நடிகர் ஒருவர் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு பூட்டு போட முடிவு செய்திருக்கிறாராம்.
பிரகாஷமான நடிகர் நடிப்பு மட்டுமின்றி தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். ஆரம்பத்தில் அவர் தயாரித்த படங்கள் அவருக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்தாலும், அடுத்தடுத்து அவரது தயாரிப்பில் வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை சந்திக்க ஆரம்பித்தன.
இதனால் மிகுந்த பண கஷ்டத்தில் வீழ்ந்த பிரகாஷமானவர், தற்போது தயாரிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர நடிகனாக வலம்வர முடிவு செய்திருக்கிறாராம். இதனால், தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு விரைவில் பூட்டு போடவிருக்கிறாராம்.
இதனால் மிகுந்த பண கஷ்டத்தில் வீழ்ந்த பிரகாஷமானவர், தற்போது தயாரிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர நடிகனாக வலம்வர முடிவு செய்திருக்கிறாராம். இதனால், தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு விரைவில் பூட்டு போடவிருக்கிறாராம்.
24 மணி நேரமும் படத்தில் நடித்த நடிகை, சமீபத்தில் தெலுங்கு நடிகரை காதலிப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறதாம். நடிகையும் காதலிப்பதை உறுதி செய்த நிலையில்,
24 மணி நேரமும் படத்தில் நடித்த நடிகை, சமீபத்தில் தெலுங்கு நடிகரை காதலிப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறதாம். நடிகையும் காதலிப்பதை உறுதி செய்த நிலையில், அந்த காதலர் யார் என்று பலரும் பல விதமாக பேசி வருகிறார்களாம். தெலுங்கு நடிகர் என்பதால் நடிகை தற்போது தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறாராம். தற்போதைக்கு ஆந்திராதான் தமிழ்நாட்டு பக்கம் இப்போதைக்கு திரும்ப மாட்டேன் என்று தமிழ் படங்களை தவிர்த்து வருகிறாராம் நடிகை!
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இறையான படத்தில் சினிமா தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்தும், அவதூறாகப் பேசியும் காட்சிகள் இருக்கிறதாம்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இறையான படத்தில் சினிமா தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்தும், அவதூறாகப் பேசியும் காட்சிகள் இருக்கிறதாம். இதனால் கோபமடைத தயாரிப்பாளர்கள், இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருக்கிறார்களாம். இதை விசாரிக்க தயாரிப்பாளர் சங்கமும் முடிவெடுத்து இருக்கிறதாம். இதற்காக இயக்குனர் படத்தை அனைத்து தயாரிப்பாளர்களுக்கு காண்பிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறாராம்.
தெலுங்கு சினிமா உலகில் சமீப காலமாக சமந்த நடிகையின் காதல் பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறதாம். இந்நிலையில், மேலும் ஒரு நடிகையின் காதல் பற்றியும் பேசி வருகிறார்களாம்.
தெலுங்கு சினிமா உலகில் சமீப காலமாக சமந்த நடிகையின் காதல் பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறதாம். இந்நிலையில், மேலும் ஒரு நடிகையின் காதல் பற்றியும் பேசி வருகிறார்களாம். தமிழில் தந்திர நடிகையாக வலம் வந்தவர், தெலுங்கில் பிரபல நடிகரின் உறவினருடன் காதல் ஏற்பட்டுள்ளதாம். இருவரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பில் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார்களாம். இதனால் காதல் ஏற்பட்டுள்ளதாக அனைவரும் கூறுகிறார்களாம்.
சங்கம் படத்தில் நடித்து பெயர் பெற்ற ஊதா நடிகை, பல படங்களில் நடித்து வருகிறாராம். இவர் நடித்த அத்தனை படங்களும் ஹிட் என்பதால் இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறதாம்.
சங்கம் படத்தில் நடித்து பெயர் பெற்ற ஊதா நடிகை, பல படங்களில் நடித்து வருகிறாராம். இவர் நடித்த அத்தனை படங்களும் ஹிட் என்பதால் இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறதாம். இதனால் சம்பளத்தையும் கணிசமாக உயர்த்திவிட்டாராம். இந்த நிலையில் தற்போது ஊதா நடிகை என்றால் தங்களது படங்களில் நடிக்க வைக்க சில தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்களாம்.
ஊதா நடிகை இப்போது எந்த பட சூட்டிங்கிற்கும் ஒழுங்காக போகாமல் சொதப்பி வருகிறாராம். ஒரே நாளில் இரண்டு படத்துக்கு கால்ஷீட்டு கொடுத்துவிட்டு குழப்பத்தில் இருப்பதுடன் இடையிடையே ஐதராபாத்துக்கும் ஓடிப்போயிடுகிறாராம். தெலுங்கு படத்தில் நடிக்காத சூழ்நிலையில் ஐதராபாத்துக்கு ஏன் ஓடிப்போகிறார் என்பதும் புரியாத புதிராக உள்ளதாம். இதனால் ஊதா நடிகை பக்கம் போக நினைக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இப்போ ரொம்பவே யோசிக்கிறாங்களாம்.
ஊதா நடிகை இப்போது எந்த பட சூட்டிங்கிற்கும் ஒழுங்காக போகாமல் சொதப்பி வருகிறாராம். ஒரே நாளில் இரண்டு படத்துக்கு கால்ஷீட்டு கொடுத்துவிட்டு குழப்பத்தில் இருப்பதுடன் இடையிடையே ஐதராபாத்துக்கும் ஓடிப்போயிடுகிறாராம். தெலுங்கு படத்தில் நடிக்காத சூழ்நிலையில் ஐதராபாத்துக்கு ஏன் ஓடிப்போகிறார் என்பதும் புரியாத புதிராக உள்ளதாம். இதனால் ஊதா நடிகை பக்கம் போக நினைக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இப்போ ரொம்பவே யோசிக்கிறாங்களாம்.
சுமார் மூஞ்சி நடிகர் தற்போது அனேகமான இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இதில் நடிகருக்கு ஜோடியாக நடிக்க வைக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம்.
சுமார் மூஞ்சி நடிகர் தற்போது அனேகமான இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இதில் நடிகருக்கு ஜோடியாக நடிக்க வைக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம். ஒரு சில காரணங்களால் நடிகருக்கு ஜோடி அமையாமல் இருக்கிறதாம். புது நடிகைகளை எதிர்பார்த்தால் அதுவும் சரியாக அமையாமல் இருக்கிறதாம். இருந்தாலும் படப்பிடிப்பு லேட்டாக தொடங்கினாலும் பரவாயில்லை நடிகருக்கு பொருத்தமான நடிகையை தேடி கண்டுபிடித்த பிறகுதான் படப்பிடிப்பு என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.
சிவமான நடிகர் காட்டில் தற்போது அடை மழை பெய்து வருகிறதாம். நட்சத்திர கடவுள் படம் வெற்றிக்குப் பிறகு தற்போது இரண்டு படங்களில் மாறி மாறி நடித்து வருகிறாராம். இப்படங்கள் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில்
சிவமான நடிகர் காட்டில் தற்போது அடை மழை பெய்து வருகிறதாம். நட்சத்திர கடவுள் படம் வெற்றிக்குப் பிறகு தற்போது இரண்டு படங்களில் மாறி மாறி நடித்து வருகிறாராம். இப்படங்கள் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். இதனால் கோடம்பாக்கத்தினர் நடிகரை பிசி ஹீரோ என்று அழைத்து வருகிறாராம். மேலும் நடிகர் கனிசமாக தனது சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறாராம்.
மும்பையில் இருந்து தமிழ் பட உலகில் காலடி எடுத்து வைத்த நடிகைகள் வரிசையில் கோடம்பாக்கத்துக்கு வந்தவர் கண்ணக்குழி நடிகை. இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் பேசப்படும் இடத்தை தொடவில்லையாம்.
மும்பையில் இருந்து தமிழ் பட உலகில் காலடி எடுத்து வைத்த நடிகைகள் வரிசையில் கோடம்பாக்கத்துக்கு வந்தவர் கண்ணக்குழி நடிகை. இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் பேசப்படும் இடத்தை தொடவில்லையாம். இதனால், பிரபல நடிகர்களின் படங்களில் சிறிய வேடம் என்றாலும் நடிக்கத் தயாராகிவிட்டாராம். சரளமாக தமிழ் பேச கற்றுக் கொண்ட இவருக்கு எதிர்பார்த்தபடி தமிழ் படங்கள் அமையாததால் வருத்தத்தில் இருக்கிறாராம்.
முட்டை படம் மூலம் பிரபலமான ஐஸ் நடிகை, தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். முட்டை படத்தை பார்த்த பிரபல இந்தி இயக்குனர் நடிகைக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பளித்திருக்கிறாராம்.
முட்டை படம் மூலம் பிரபலமான ஐஸ் நடிகை, தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். முட்டை படத்தை பார்த்த பிரபல இந்தி இயக்குனர் நடிகைக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பளித்திருக்கிறாராம். இந்தி படம் என்பதால் சம்பளம் பல மடங்கு அதிகரித்து இருக்கிறாராம். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நடிகை, இந்த படத்தில் கவர்ச்சி உடையிலும் கலக்க இருக்கிறாராம். இந்தியில் பிரபலமாகவே கவர்ச்சி மாறியிருப்பதாக பலரும் பேசி வருகிறார்களாம்.
ஆரியமான நடிகர் சமீபத்தில் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளதாம். இதனால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்று போராடி வருகிறாராம்.
ஆரியமான நடிகர் சமீபத்தில் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளதாம். இதனால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்று போராடி வருகிறாராம். இந்நிலையில் இயக்குனர் ஒருவர் நடிகரை சமீபத்தில் அணுகினாராம். கதை எல்லாம் கேட்ட நடிகர், படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். இந்த படத்தை தயாரிக்கும் முன்னணி நிறுவனம், நடிகருக்கு நல்ல சம்பளம் பேசினாலும், இந்த படத்தில் நடித்தால் தன் இமேஜ் பாதிக்கப்படுமோ என்று அஞ்சி நடிக்க மறுத்துவிட்டாராம்.






