என் மலர்tooltip icon

    கிசுகிசு

    பென்சிலான நடிகர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். இவர் நடித்து வரும் ஒரு படத்தின் கதாநாயகியை நீக்கம் செய்தார்களாம். இந்த நடிகைக்கு பதிலாக புது நடிகையை தேட ஆரம்பித்தார்களாம்.
    பென்சிலான நடிகர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். இவர் நடித்து வரும் ஒரு படத்தின் கதாநாயகியை நீக்கம் செய்தார்களாம். இந்த நடிகைக்கு பதிலாக புது நடிகையை தேட ஆரம்பித்தார்களாம். ஆனால், நடிகரோ தன்னுடன் இரண்டு படங்களில் நடித்த ஆனந்தமான நடிகைதான் வேணும் என்று கூறினாராம். இதற்கு இயக்குனரும் தயாரிப்பாளரும் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஓகே சொல்லிவிட்டார்களாம். ஏன் இந்த நடிகையுடனே நடிக்கிறார் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    வளர்ந்து வரும் நடிகர் ஒருவர் தற்போது புதிதாக கமிட் ஆகும் படங்களில் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம்.
    சிவமான நடிகர் காட்டில் தற்போது அடை மழைதான். வசூல் முருகனாக வலம் வரும் இவரை தங்கள் படங்களில் புக் செய்ய நிறைய தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். வருகிற வாய்ப்பையெல்லாம் தட்டிக் கழிக்காமல் எல்லாவற்றுக்கும் ஓகே சொல்லி தனது கல்லாவை நிரப்பி வருகிறார். அதேபோல், வருகிறவர்களிடம் அவர்களின் பணபலத்தை ஆராய்ந்துதான் தனது சம்பளத்தை அவர் உறுதி செய்கிறாராம்.

    அந்த வரிசையில் சமீபத்தில் ‘தல’ நடிகரை வைத்து வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த ரத்னமான தயாரிப்பாளர் நடிகரிடம் போய் கால்ஷீட் கேட்டிருக்கிறார். வரிசையான ஹிட் படங்கள் கொடுத்த தயாரிப்பாளர் ஆச்சே, அதனால் நாம் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் அவர் தருவார் என்று அவரிடம் ரூ.23 கோடி சம்பளமாக கேட்டுள்ளார் நடிகர்.

    தயாரிப்பாளரும் எந்த மறுப்பும் சொல்லாமல் அவர் கேட்ட தொகையை சம்பளமாக கொடுக்க முன் வந்துவிட்டாராம். இப்போதுதான் வளர்ந்து வருகிறார், அவருக்கு இவ்வளவு பெரிய சம்பளமா என கேட்கிறவர்களிடம் எல்லாம், ஓடுற குதிரையில பணத்தை கட்டுறது தப்பில்லையே என்று தயாரிப்பாளர் கூறி வருகிறாராம்.
    சூர்யமான நடிகர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கலவையான வரவேற்பை பெற்று வருகிறதாம். இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே சென்னை இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவிருந்தாராம்.
    சூர்யமான நடிகர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கலவையான வரவேற்பை பெற்று வருகிறதாம். இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே சென்னை இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவிருந்தாராம். ஆனால், இயக்குனருக்கு நட்சத்திர நடிகர் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததாம். இதனால் அந்த படத்தை இயக்க சென்றுவிட்டாராம். தற்போது படம் ரிலீசுக்கு தயாரான நிலையில், எப்போது என்னை வைத்து படம் இயக்குவீர்கள் என்று சென்னை இயக்குனரிடம் கேட்டு வருகிறாராம் நடிகர். இயக்குனரோ பட வேலைகள் முடியாமல் இருப்பதால் மௌனமாக இருந்து வருகிறாராம்.
    தமிழ், தெலுங்கு பட உலகில் கொடி கட்டி பறந்த வீரமான நடிகையின் அந்தஸ்து, பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்கு பிறகு அதிகரித்ததாம். இதையடுத்து பிரபல நாயகர்களுடன் மட்டும் நடிப்பது என்ற கொள்கையில் பிடிவாதமாக இருந்தாராம்.
    தமிழ், தெலுங்கு பட உலகில் கொடி கட்டி பறந்த வீரமான நடிகையின் அந்தஸ்து, பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்கு பிறகு அதிகரித்ததாம். இதையடுத்து பிரபல நாயகர்களுடன் மட்டும் நடிப்பது என்ற கொள்கையில் பிடிவாதமாக இருந்தாராம். அவரது விருப்பப்படி வாய்ப்புகள் அமையாததால் லட்சியத்தை தளர்த்தினாராம். இப்போது ஜோடியை பற்றி கவலைப்படாமல் அழுத்தமான வேடம் அமைய வேண்டும் என்ற ஆசையை அடைய முயற்சி செய்து வருகிறாராம். ஆசை பலித்தால் சரிதான் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    வில்லனாக அறிமுகமான மொட்டை நடிகர் தற்போது காமெடியில் கலக்கி வருகிறாராம். தற்போது கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாக நடித்து வருகிறாராம்.
    வில்லனாக அறிமுகமான மொட்டை நடிகர் தற்போது காமெடியில் கலக்கி வருகிறாராம். தற்போது கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாக நடித்து வருகிறாராம். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட நடிகர், ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம். தயாரிப்பாளர்களும் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து வருகிறார்களாம்.
    பரதேசி நடிகரின் படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியதால் சினிமாவில் வெற்றியை பெற தற்போது புதிய முடிவை எடுத்துள்ளாராம்.
    பரதேசி நடிகருக்கு தொடர்ச்சியாக வெளியான படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், சோர்ந்துபோன நடிகர் இனிமேல் நடிக்கும் படங்களுக்கு மிகவும் சிரத்தை எடுத்து நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இயக்குனர்களுக்காக எந்த படத்தையும் ஓகே சொல்லாமல், நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.

    அதுமட்டுமில்லாமல், தனது உடலை வருத்தி கடுமையாக உழைத்து நடித்த படங்கள் எல்லாம் நடிகருக்கு பெரிய கைகொடுத்துள்ளதால், அந்த பார்முலாவையே வரும் படங்களுக்கும் பயன்படுத்தவுள்ளாராம். எது எப்படியோ, நடிகரின் புது முயற்சி அவருக்கு கைகொடுத்தால் சரிதான். 
    கடைத் தெரு நடிகை நடித்த குடும்ப பாங்கான படம் அதிகம் பேசப்பட்டதாம். அதே பாணியை பின் பற்றிய பல படங்களில் நடித்தாராம். பின்னர் கவர்ச்சி நாயகி ஆனாராம். அதுவும் பரவலராக பேசப்பட்டதாம்.
    கடைத் தெரு நடிகை நடித்த குடும்ப பாங்கான படம் அதிகம் பேசப்பட்டதாம். அதே பாணியை பின் பற்றிய பல படங்களில் நடித்தாராம். பின்னர் கவர்ச்சி நாயகி ஆனாராம். அதுவும் பரவலராக பேசப்பட்டதாம். இந்த நிலையில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படத்தில் கவர்ச்சியை முழுமையாக கைவிட்டு இருக்கிறாராம். இதற்கு வரவேற்பு கிடைத்தால் இந்த பாணி தொடரலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.
    மெட்ராஸ் நடிகைக்கு தெலுங்கு பட உலகில் மவுசு கூடியிருக்கிறது. அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த தெலுங்கு படம் ஆந்திராவில் அமோக வெற்றி பெற்றிருக்கிறதாம்.
    மெட்ராஸ் நடிகைக்கு தெலுங்கு பட உலகில் மவுசு கூடியிருக்கிறது. அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த தெலுங்கு படம் ஆந்திராவில் அமோக வெற்றி பெற்றிருக்கிறதாம். அடுத்து அவருக்கு தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான இரண்டெழுத்து நடிகருடன் ஜோடி போடும் வாய்ப்பு வந்திருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகிறதாம்.
    இசையமைப்பாளராக இருந்து பிட்டு பட நடிகர் என்று பெயர் பெற்ற நடிகர், தற்போது பல படங்களில் நாயகனாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறாராம்.
    இசையமைப்பாளராக இருந்து பிட்டு பட நடிகர் என்று பெயர் பெற்ற நடிகர், தற்போது பல படங்களில் நாயகனாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறாராம். இவர் நயனமான நடிகை நடிக்கும் படத்துக்கு இசையமைக்க மறுத்து வருகிறாராம். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கூறியும் ஏதோ காரணம் சொல்லி சமாளித்து வருகிறாராம்.

    இசையமைப்பாளர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவருடன் நடிகை ஜோடி போட மறுத்து விட்டாராம். இதனாலயே இசையமைப்பாளர் இப்படி செய்வதாக கூறுகிறார்களாம்.
    தளபதியாருடன் தெறியாட்டம் ஆடி, சில நாட்கள் இருபத்திநாலு மணிநேரமும் பிசியாக இருந்த நடிகை, சிறிது காலம் நடிப்பு முழுக்கு போட்டிருக்கிறாராம்.
    தளபதியாருடன் தெறியாட்டம் ஆடி, சில நாட்கள் இருபத்திநாலு மணிநேரமும் பிசியாக இருந்த நடிகை, சிறிது காலம் நடிப்பு முழுக்கு போட்டிருக்கிறாராம். இது ஓய்வு எடுக்கும் நேரம் என்று ஒரு சிலர் கூறினாலும், மற்றும் சிலர் நடிகை காதலில் விழுந்து விட்டதாகவும், அவருடன் நேரத்தை செலவிடவே நடிகை இவ்வாறு செய்திருப்பதாகவும் கூறுகிறார்களாம்.

    மேலும் நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் நான் சிங்கிளாக இருக்கிறேன் என்று யார் சொன்னது என்று பேசியிருக்கிறாராம். இதனால் நடிகை மீண்டும் யாரையோ காதலிக்க ஆரம்பித்து விட்டார் என்று பரவலாக பேசுகிறார்களாம்.
    உயிரைக் கொடுத்த நடிக்கின்ற படங்கள் தனக்கு எந்தவகையிலும் பிரயோஜனமாய் இல்லை என்று நடிகர் ஒருவர் புலம்பி வருகிறாராம்.
    இருமுக நடிகருக்கு தற்போதுதான் ஞானக்கண் திறந்திருக்கிறதாம். அதாவது, இவர் தனது உடலை வருத்தி, உயிரைக் கொடுத்து நடித்த படங்களுக்கு எல்லாம் எதிர்பார்த்த வரவேற்பு, அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

    இவருடைய நடிப்பில் ஒற்றை எழுத்தில் வெளிவந்த படத்திற்காக தனது உடலை வருத்தி, வந்த வாய்ப்புகளையெல்லாம் உதறி கிட்டத்தட்ட 2 ஆண்டு காலம் கஷ்டப்பட்டு நடித்துக் கொடுத்தார். அந்த படம் மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. அதேநேரத்தில் நடிகருக்கு இந்தியாவின் உயரிய விருது கிடைக்கும் எனவும் எதிர்பார்த்தனர். அதுவும் நழுவிப் போனது.

    இதனால், விரக்தியின் உச்சத்துக்கு சென்ற நடிகர், இனிமேல், உடலை வருத்தி எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளாராம். உடலை வருத்தி, உயிரை கொடுத்து நடித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. அப்படியிருக்கும்போது ஏன் அப்படி நடிக்கவேண்டும் என்று தனக்குத்தானே கேள்வியை எழுப்பிக்கொண்டு, இனி அந்த மாதிரி நடிக்கப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம். எப்படியோ, இருமுகர் எடுத்த முடிவு அவருக்கு நல்லபடியாய் அமைந்தால் சரிதான்.

    தமிழில் கயலாடி வந்த நடிகை தற்போது பிரகாஷமான நடிகருடன் நடித்து வருகிறாராம். இப்படத்தை தவிர்த்து கையில் ஒரு படம் மட்டுமே இருக்கிறதாம்.
    தமிழில் கயலாடி வந்த நடிகை தற்போது பிரகாஷமான நடிகருடன் நடித்து வருகிறாராம். இப்படத்தை தவிர்த்து கையில் ஒரு படம் மட்டுமே இருக்கிறதாம். நடிகைக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தாலும் தமிழில் முக்கிய இடத்தை பிடிக்கும் வகையில் இது வரை எந்த படமும் கிடைக்கவில்லையாம். எனவே, ஆந்திராவை சேர்ந்த இவர் தெலுங்கிலும் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறாராம்.
    ×