என் மலர்
கிசுகிசு
இனிப்புக்கடை நடிகை நடித்து சமீபத்தில் வெளிவந்த ஒரு தெலுங்கு படம் தோல்வி அடைந்து விட்டதாம். இதனால், அவருடைய தெலுங்கு பட உலக மார்க்கெட் கேள்விக்குறியாகி விட்டதாம்.
இனிப்புக்கடை நடிகை நடித்து சமீபத்தில் வெளிவந்த ஒரு தெலுங்கு படம் தோல்வி அடைந்து விட்டதாம். இதனால், அவருடைய தெலுங்கு பட உலக மார்க்கெட் கேள்விக்குறியாகி விட்டதாம். தமிழிலும் சொல்லிக் கொள்கிற மாதிரி அவருக்கு படங்கள் தற்போது இல்லையாம். இழந்த மார்க்கெட்டை திரும்ப பிடிப்பதற்காக, அவர் ஒரு மந்திரவாதியிடம் போய் தாயத்துடன் கூடிய வசிய கயிறை வாங்கி இடுப்பில் கட்டியிருக்கிறாராம்!
சிரிப்பு பேய்களை அறிமுகம் செய்து வெற்றி பெற்ற முனி நடிகர், நிறைய சமூக சேவைகளும் செய்து வருகிறாராம். இதுபற்றி கேள்விப்பட்ட நயன நடிகைக்கு முனி நடிகர் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டு அவருடைய புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம்.
சிரிப்பு பேய்களை அறிமுகம் செய்து வெற்றி பெற்ற முனி நடிகர், நிறைய சமூக சேவைகளும் செய்து வருகிறாராம். இதுபற்றி கேள்விப்பட்ட நயன நடிகைக்கு முனி நடிகர் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டு அவருடைய புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம். அதோடு தனது சம்பளத்தையும் குறைத்துக் கொள்ள முடிவு செய்து இருக்கிறாராம். யாருக்காகவும் சம்பளத்தை குறைக்காத நடிகை, தற்போது நடிகரின் நல்ல எண்ணத்தை பார்த்து குறைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.
மூன்றெழுத்து நாயகி நடிகைக்கு சொந்தமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பண்ணை வீடு இருக்கிறதாம். அங்கே வாரந்தோறும் அவர் பார்டி நடத்தி வருகிறாராம்.
மூன்றெழுத்து நாயகி நடிகைக்கு சொந்தமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பண்ணை வீடு இருக்கிறதாம். அங்கே வாரந்தோறும் அவர் பார்டி நடத்தி வருகிறாராம். பார்டியில் பலரும் கலந்துக் கொள்கிறார்களாம். இங்கு வரும் அனைவரும் சீருடையில் வர வேண்டும் என்பதே அவருடைய ஒரே நிபந்தனையாம்.
தற்போது நட்சத்திர நடிகரை வைத்து படம் இயக்கிய இயக்குனர், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் இருக்கும் இடத்திற்கு வேறு வேலையாக வந்திருக்கிறார்.
தற்போது நட்சத்திர நடிகரை வைத்து படம் இயக்கிய இயக்குனர், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் இருக்கும் இடத்திற்கு வேறு வேலையாக வந்திருக்கிறார். அங்கு பத்திரிகையாளர்கள் இருப்பதை தெரிந்துக் கொண்ட இயக்குனர், உடனே அங்கிருந்து கிளம்பி விட்டாராம். ஏன் இப்படி செய்தார் என்று பலரும் வருந்திக் கொண்டிருந்த நிலையில், படத்தை பற்றி ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று பயந்து ஓடியதாக பேசினார்களாம்.
பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்ற டெல்லி நடிகர், தன் மகனை கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை எடுத்தாராம்.
பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்ற டெல்லி நடிகர், தன் மகனை கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை எடுத்தாராம். மிகவும் எதிர்பார்த்த இப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால், இப்படம் எதிர்பார்த்தவர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. வீட்டை விற்று படம் எடுத்த டெல்லி நடிகருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறதாம். போட்ட பணத்தில் கால் பங்குகூட வரவில்லையாம். இதனால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம் டெல்லி நடிகர்!
தற்போது முன்னணி நடிகைகளில் மிக உயரமான தோற்றம் கொண்ட இடுப்பழகி நடிகைக்கு அவரது உயரமே எதிரியாக அமைந்து வருகிறதாம்.
தற்போது முன்னணி நடிகைகளில் மிக உயரமான தோற்றம் கொண்ட இடுப்பழகி நடிகைக்கு அவரது உயரமே எதிரியாக அமைந்து வருகிறதாம். பிரபல கதாநாயகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்த இவர் தற்போது பிரபலமானவர்கள் அவரை ஜோடி சேர்க்க தயங்குகிறார்களாம். நடிகை பக்கத்தில் நின்றால் பிரபல கதாநாயர்கள் சிலர் குள்ளமாக தெரிகிறார்களாம். இதனால் நடிகைக்கு பெரிய பிரச்சனை ஏற்படுகிறதாம். பட வாய்ப்புகளும் குறைந்து வருகிறதாம்.
தமிழுக்கு நம்பரை அழுத்திய நடிகை, அந்த படத்திற்குப் பிறகு சினமான படத்தில் நடித்தாராம். தான் சம்பாரித்த பணத்தை மேனேஜர் ஏமாற்றி விட்டதாக கூறும் இவர்,
தமிழுக்கு நம்பரை அழுத்திய நடிகை, அந்த படத்திற்குப் பிறகு சினமான படத்தில் நடித்தாராம். தான் சம்பாரித்த பணத்தை மேனேஜர் ஏமாற்றி விட்டதாக கூறும் இவர், பாய் ப்ரெண்டையே தனது மேனேஜர் ஆக்கி விட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில் வசித்து வருகிறார்களாம். நடிகை தனக்கு வாய்ப்பு கேட்பதுடன், தனது பாய் ப்ரெண்டுக்கும் சேர்த்து வாய்ப்பு கேட்கிறாராம்.
வம்பு நடிகருடன் நட்பு வைத்துக் கொண்டதால் சர்ச்சையில் சிக்கி தற்போது நிறைய படவாய்ப்புகளை இழந்து தவிக்கிறாராம் இளம் இசையமைப்பாளர் ஒருவர்.
வம்பு நடிகரிடம் ஏன் நட்பு வைத்துக்கொண்டோம் என்று கொலவெறியாக சுற்றிக்கொண்டிருக்கிறாராம் இளம் இசையமைப்பாளர். தான் சம்பந்தப்படாத ஒரு பாடல் சர்ச்சையில் தன்னை மாட்டிவிட்டு குளிர்காய்ந்த வம்பு நடிகரால் தற்போது படவாய்ப்புகள் இன்றி தவிக்கிறாராம் இசையமைப்பாளர். இந்த சர்ச்சையிலிருந்து முழுவதும் விலகிய பிறகும், இன்னமும் அவர்மீதான கெட்ட இமேஜ் சினிமா வட்டாரத்தில் இன்னும் மறையாததால் இவரை படங்களில் ஒப்பந்தம் செய்ய பலரும் தயங்கி வருகிறார்களாம்.
எவ்வளவு வேகத்தில் பாப்புலரானாரோ, அதே வேகத்தில் சரிவை நோக்கி சென்றுவிட்டதில் இசையமைப்பாளருக்கு மிகவும் வருத்தமாம். இதனால், இனிமேல் தேவையில்லாத நட்புகளை கூட சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
எவ்வளவு வேகத்தில் பாப்புலரானாரோ, அதே வேகத்தில் சரிவை நோக்கி சென்றுவிட்டதில் இசையமைப்பாளருக்கு மிகவும் வருத்தமாம். இதனால், இனிமேல் தேவையில்லாத நட்புகளை கூட சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
தமிழ் நடிகைகள் பலரும் மும்பைக்கு பறந்து, இந்தி படங்களில் நடிக்க ஆசை படுவார்கள். ஆனால், மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த கண்ணக்குழி நடிகை, இங்கு பல படங்களில் நடித்து விட்டாராம்.
தமிழ் நடிகைகள் பலரும் மும்பைக்கு பறந்து, இந்தி படங்களில் நடிக்க ஆசை படுவார்கள். ஆனால், மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த கண்ணக்குழி நடிகை, இங்கு பல படங்களில் நடித்து விட்டாராம். ஆனால் எந்த படமும் சொல்லுமளவிற்கு ஓடவில்லையாம். மேலும் நடிகைக்கு எந்த பெயரும் கிடைக்கவில்லையாம். இதனால் வருத்தமடைந்த நடிகை, தற்போது தாய் மொழி படங்களில் நடிக்க மும்பை பறந்து சென்றிருக்கிறாராம்.
நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருக்கும் மூன்றெழுத்து நம்பர் நடிகைக்கு தற்போது பட வாய்ப்புக்கள் குறைந்து வருகிறதாம்.
நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருக்கும் மூன்றெழுத்து நம்பர் நடிகைக்கு தற்போது பட வாய்ப்புக்கள் குறைந்து வருகிறதாம். அதிக சம்பளம் கேட்பதால் நடிகைக்கு இந்த நிலைமை வந்திருக்கிறதாம். இதனால், நடிகையின் தாயார் சம்பளம் ஒரு பிரச்சினை அல்ல. அதை குறைத்துக் கொள்ளலாம்...’’ என்று இறங்கி வந்து இருக்கிறாராம். மகளுக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனதில், அவருக்கு பெரும் கவலை. அதனால், கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி, மகளுக்காக வாய்ப்பு கேட்கிறாராம், தாய்க்குலம்!
பட்டணத்து நடிகை கவர்ச்சியில் தாராளம் காட்டி, முன்னணி நடிகைகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளாராம். இதுகுறித்து பார்ப்போம்....
வெளிநாட்டு நடிகையான பட்டணத்து நடிகை தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்து வெற்றிவாகை சூடி வருகிறார். இதனால் தமிழில் முன்னணி நடிகைகள் கொஞ்சம் ஆட்டம் கண்டு போயிருக்கிறார்கள். தமிழில் இவரது மார்க்கெட் உயர்ந்திருந்தாலும், தெலுங்கு பக்கம் போனால் இவரது மார்க்கெட் கொஞ்சம் டல்லடிக்கத்தான் செய்கிறதாம்.
இதனால் என்ன செய்யலாம் என்று யோசனை செய்தவருக்கு தற்போது புது ஆயுதம் ஒன்று கையில் கிடைத்திருக்கிறதாம். அதாவது படு கவர்ச்சியில் இறங்கினால் தெலுங்கு மார்க்கெட்டில் நல்ல இடத்தை பிடிக்கலாம் என்று நினைத்தவருக்கு, தற்போது அந்த முடிவே அவருக்கு தெலுங்கு முன்னணி ஹீரோ ஒருவருக்கு ஜோடியாகும் வாய்ப்பை தேடிக் கொடுத்திருக்கிறதாம்.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு, இயக்குனர் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி இந்த படத்தில் நம்மால் முடிந்த அளவுக்கு கவர்ச்சியை காட்டி, தெலுங்கில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாராம். இதனால், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் கொஞ்சம் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.
இதனால் என்ன செய்யலாம் என்று யோசனை செய்தவருக்கு தற்போது புது ஆயுதம் ஒன்று கையில் கிடைத்திருக்கிறதாம். அதாவது படு கவர்ச்சியில் இறங்கினால் தெலுங்கு மார்க்கெட்டில் நல்ல இடத்தை பிடிக்கலாம் என்று நினைத்தவருக்கு, தற்போது அந்த முடிவே அவருக்கு தெலுங்கு முன்னணி ஹீரோ ஒருவருக்கு ஜோடியாகும் வாய்ப்பை தேடிக் கொடுத்திருக்கிறதாம்.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு, இயக்குனர் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி இந்த படத்தில் நம்மால் முடிந்த அளவுக்கு கவர்ச்சியை காட்டி, தெலுங்கில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாராம். இதனால், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் கொஞ்சம் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.
காத்தாடி நடிகர் தற்போது சொந்தமாக படம் தயாரித்து அவரே நடிக்க இருக்கிறாராம். இதில் நடிகருக்கு ஜோடியாக அவருடன் நட்பாக பழகி வந்த எதிர் நீச்சலடித்த நடிகை நடிப்பார் என்று கூறப்பட்டதாம்.
காத்தாடி நடிகர் தற்போது சொந்தமாக படம் தயாரித்து அவரே நடிக்க இருக்கிறாராம். இதில் நடிகருக்கு ஜோடியாக அவருடன் நட்பாக பழகி வந்த எதிர் நீச்சலடித்த நடிகை நடிப்பார் என்று கூறப்பட்டதாம். நடிகையும் எதிர்பார்த்த நிலையில், தற்போது வேறொரு நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். இதனால் நடிகை ஏமாந்து விட்டாராம். இரண்டு நடிகைகள் கொண்ட அந்த படத்தில் மற்றொரு நடிகை வேடம் கிடைக்கும் என்று காத்திருக்கிறாராம். ஆனால், அந்த வேடத்திற்கும் நடிகையை தேர்வு செய்துவிட்டதாக கூறுகிறார்களாம்.






