என் மலர்tooltip icon

    சினிமா

    படப்பிடிப்புக்கு அடிக்கடி மட்டம் போடும் நடிகை!
    X

    படப்பிடிப்புக்கு அடிக்கடி மட்டம் போடும் நடிகை!

    சங்கம் படத்தில் நடித்து பெயர் பெற்ற ஊதா நடிகை, பல படங்களில் நடித்து வருகிறாராம். இவர் நடித்த அத்தனை படங்களும் ஹிட் என்பதால் இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறதாம்.
    சங்கம் படத்தில் நடித்து பெயர் பெற்ற ஊதா நடிகை, பல படங்களில் நடித்து வருகிறாராம். இவர் நடித்த அத்தனை படங்களும் ஹிட் என்பதால் இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறதாம். இதனால் சம்பளத்தையும் கணிசமாக உயர்த்திவிட்டாராம். இந்த நிலையில் தற்போது ஊதா நடிகை என்றால் தங்களது படங்களில் நடிக்க வைக்க சில தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்களாம்.

    ஊதா நடிகை இப்போது எந்த பட சூட்டிங்கிற்கும் ஒழுங்காக போகாமல் சொதப்பி வருகிறாராம். ஒரே நாளில் இரண்டு படத்துக்கு கால்ஷீட்டு கொடுத்துவிட்டு குழப்பத்தில் இருப்பதுடன் இடையிடையே ஐதராபாத்துக்கும் ஓடிப்போயிடுகிறாராம். தெலுங்கு படத்தில் நடிக்காத சூழ்நிலையில் ஐதராபாத்துக்கு ஏன் ஓடிப்போகிறார் என்பதும் புரியாத புதிராக உள்ளதாம். இதனால் ஊதா நடிகை பக்கம் போக நினைக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இப்போ ரொம்பவே யோசிக்கிறாங்களாம்.
    Next Story
    ×