என் மலர்
கிசுகிசு
தமிழ் பட உலகின் முக்கிய ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்த கொழுகொழு நடிகை, இப்போது ஜெயமான நடிகர் படத்தில் நடித்து வருகிறாராம். இப்படத்தை அடுத்து நடிகையிடம் வேறு படங்கள் கைவசம் இல்லையாம்.
தமிழ் பட உலகின் முக்கிய ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்த கொழுகொழு நடிகை, இப்போது ஜெயமான நடிகர் படத்தில் நடித்து வருகிறாராம். இப்படத்தை அடுத்து நடிகையிடம் வேறு படங்கள் கைவசம் இல்லையாம். அடுத்ததாக தனது நடிப்பு திறமையை காட்டும் நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இதற்கான கதைகளை கேட்டு வருகிறாராம் நடிகை
அம்மா பெயரை வைத்து வாரிசு நடிகையாக அறிமுகமானவர், இரண்டே படங்களில் தளபதிக்கே ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்துவிட்டதாம். பாப்புலாரிட்டி அதிகமாக அதிகமாக நடிகையின் சம்பளமும் எகிறிக் கொண்டே இருக்கிறதாம்.
அம்மா பெயரை வைத்து வாரிசு நடிகையாக அறிமுகமானவர், இரண்டே படங்களில் தளபதிக்கே ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்துவிட்டதாம். பாப்புலாரிட்டி அதிகமாக அதிகமாக நடிகையின் சம்பளமும் எகிறிக் கொண்டே இருக்கிறதாம். அரை கோடியாக இருந்த சம்பளத்தை தளபதியுடன் ஜோடி ஆனதும் ஒரு கோடி ஆக்கிவிட்டாராம். இதனால் நடிகையை அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயங்கி வருகிறார்களாம்.
டாப் ஹீரோக்களுடன் ஜோடிபோட்ட மழை நடிகைக்கு திடீர் மார்க்கெட் சரிவு ஏற்பட்டதாம். காத்திருந்து பார்த்தவருக்கு ஏமாற்றம் மிஞ்சியதாம். இனியும் தாமதித்தால் வரும் வருமானமும் பூஜ்யம் ஆகிவிடும் என்று புரிந்துகொண்டு சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினாராம்.
டாப் ஹீரோக்களுடன் ஜோடிபோட்ட மழை நடிகைக்கு திடீர் மார்க்கெட் சரிவு ஏற்பட்டதாம். காத்திருந்து பார்த்தவருக்கு ஏமாற்றம் மிஞ்சியதாம். இனியும் தாமதித்தால் வரும் வருமானமும் பூஜ்யம் ஆகிவிடும் என்று புரிந்துகொண்டு சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினாராம். சமீபத்தில் பெரிய நடிகர் படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார்களாம். இதில் நடிகைக்கு ரூ.35 லட்சம் சம்பளம் என்று பட தரப்பு கூறியதாம். மறுப்பு சொல்லாமல் ஓ. கே சொல்லிவிட்டாராம் மழை நடிகை!
நடித்துக் கொண்டே படங்களில் பாடியும் வரும் ரியா நடிகை நம்பிக்கையுடன் ஒரு இசை ஆல்பம் தயாரித்தாராம். அந்த ஆல்பத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கைக்காசை போட்டு செலவு செய்தாராம்.
நடித்துக் கொண்டே படங்களில் பாடியும் வரும் ரியா நடிகை நம்பிக்கையுடன் ஒரு இசை ஆல்பம் தயாரித்தாராம். அந்த ஆல்பத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கைக்காசை போட்டு செலவு செய்தாராம். ஆனால், ஆல்பத்தை வாங்கி வெளியிட யாரும் முன்வரவில்லையாம்.
காத்திருந்து காத்திருந்து நொந்து போகியிருக்கிறாராம் நடிகை. இனிமேல் இசை மீது கவனம் செலுத்தாமல், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறாராம்.
காத்திருந்து காத்திருந்து நொந்து போகியிருக்கிறாராம் நடிகை. இனிமேல் இசை மீது கவனம் செலுத்தாமல், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறாராம்.
வம்பு செய்யும் நடிகர் தற்போது திருமணத்திற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சர்ச்சைகளுக்கு பெயர் வம்பு நடிகரின் இரண்டு காதலும் கைநழுவி போனதால் இனிமேல் பெற்றோர் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்வது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். ஜோசியத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவருடைய அப்பாவும் தனது மகனுக்கு திருமணம் செய்துவைக்க நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
வம்பு நடிகர் நடித்த படம் வெளிவருமா, வராதா என்று இருந்த நிலையில், ஒருவழியாக வெளியாகி ஹிட்டனதால் தனது மகனுக்கு நல்ல நேரம் பிறந்துவிட்டது என்று முடிவு செய்து தற்போது வம்பு நடிகருக்கு பெண் தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளாராம். கூடிய விரைவில் வம்பு நடிகரின் திருமண செய்தி வெளிவந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
வம்பு நடிகர் நடித்த படம் வெளிவருமா, வராதா என்று இருந்த நிலையில், ஒருவழியாக வெளியாகி ஹிட்டனதால் தனது மகனுக்கு நல்ல நேரம் பிறந்துவிட்டது என்று முடிவு செய்து தற்போது வம்பு நடிகருக்கு பெண் தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளாராம். கூடிய விரைவில் வம்பு நடிகரின் திருமண செய்தி வெளிவந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்து இருக்கும் விஜய நடிகர், வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து வருவதால், தயாரிப்பாளர்களின் கவனம் இவர் பக்கம் திரும்பியிருக்கிறதாம்.
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்து இருக்கும் விஜய நடிகர், வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து வருவதால், தயாரிப்பாளர்களின் கவனம் இவர் பக்கம் திரும்பியிருக்கிறதாம். சமீபத்தில் இவர் நடித்து திரைக்கு வந்த படம் இங்கே வெற்றி பெற்றது போல் ஆந்திராவிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால், இசை நாயகனின் ‘மார்க்கெட்’ அந்தஸ்து மேலும் ஒரு படி உயர்ந்து இருக்கிறதாம்!
மதராச நடிகை தற்போது தமிழ், இந்தி படங்களில் பிசி நடிகை ஆகி இருக்கிறாராம். சமீபத்தில் ஒரு விழாவுக்கு சென்ற நடிகை அதன் பிறகு பிரான்ஸ் நாட்டு தொழில் அதிபருடன் கை கோர்த்து வலம் வருகிறாராம்.
மதராச நடிகை தற்போது தமிழ், இந்தி படங்களில் பிசி நடிகை ஆகி இருக்கிறாராம். சமீபத்தில் ஒரு விழாவுக்கு சென்ற நடிகை அதன் பிறகு பிரான்ஸ் நாட்டு தொழில் அதிபருடன் கை கோர்த்து வலம் வருகிறாராம். விழாவில் நடந்த சந்திப்பின் போது ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறி விட்டதாக படங்களுடன் செய்திகள் வெளியாகி இருக்கிறதாம். இது உண்மையா என்பதை நடிகை தான் உறுதிப்படுத்த வேண்டும் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
இதய நாயகனின் வாரிசு நடிகர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம், ரூ. 7 கோடி கேட்கிறாராம். பணத்தை மொத்தமாக கொடுத்து விடுங்கள்,
இதய நாயகனின் வாரிசு நடிகர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம், ரூ. 7 கோடி கேட்கிறாராம். பணத்தை மொத்தமாக கொடுத்து விடுங்கள், நானே படம் எடுத்து முதல் பிரதியை தயார் செய்து தருகிறேன் என்கிறாராம். இந்த ஆட்டத்துக்கு இதுவரை எந்த தயாரிப்பாளரும் சிக்கவில்லையாம்.
சமமான நடிகை ஒரு தெலுங்கு நாயகனை காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தாராம். அந்த நாயகன் யார்? என்பதையும் அவர் ஜாடை மாடையாக தெரிவித்தார்.
சமமான நடிகை ஒரு தெலுங்கு நாயகனை காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தாராம். அந்த நாயகன் யார்? என்பதையும் அவர் ஜாடை மாடையாக தெரிவித்தார். இதனால், நாயகனின் தந்தையான மூத்த நடிகர் அதிர்ச்சி அடைந்தார். பையனை அழைத்து விவரம் கேட்டு, அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்றாராம்.
அதோடு, நடிகையையும் அழைத்து, இந்த வேலை எல்லாம் எங்ககிட்ட வச்சுக்காதே என்று கண்டித்தாராம். இவர் மட்டும் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம்...நாங்க செய்யக் கூடாதா?’’ என்று முணுமுணுத்தபடி வெளியேறி இருக்கிறார், சமமான நடிகை!
அதோடு, நடிகையையும் அழைத்து, இந்த வேலை எல்லாம் எங்ககிட்ட வச்சுக்காதே என்று கண்டித்தாராம். இவர் மட்டும் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம்...நாங்க செய்யக் கூடாதா?’’ என்று முணுமுணுத்தபடி வெளியேறி இருக்கிறார், சமமான நடிகை!
விரல் வித்தை நடிகருக்கு சில ஆண்டுகளாக நேரம் சரியில்லாமல் இருந்ததாம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதால், அவருடைய நேரம் நன்றாக இருப்பதாக ஜோதிடர் கணித்து இருக்கிறாராம்.
விரல் வித்தை நடிகருக்கு சில ஆண்டுகளாக நேரம் சரியில்லாமல் இருந்ததாம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதால், அவருடைய நேரம் நன்றாக இருப்பதாக ஜோதிடர் கணித்து இருக்கிறாராம். இந்த நேரத்தை தவறவிடாமல், அவருக்கு உடனே திருமணம் செய்து வைத்து விடும்படி யோசனை சொல்லியிருக்கிறாராம் ஜோதிடர். அதைத்தொடர்ந்து, மணமகள் வேட்டையை தீவிரப்படுத்தியிருக்கிறார் நடிகரின் அப்பா!
இனி ஹீரோக்களுடன் இணைந்து டூயட் ஆட மாட்டேன் என முன்னணி நடிகை ஒருவர் பிடிவாதம் பிடிக்கிறாராம்.
இனிப்பு கடையின் பெயரை தனது பெயருக்கு பின்னால் வைத்துக் கொண்டுள்ள நடிகை, இனிமேல் ஹீரோக்களை காதலித்து அவர்களுடன் டூயட் ஆடி நடித்து போரடித்து விட்டதாகவும், இனிமேல் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கவுள்ளதாகவும் கூறி வருகிறாராம்.
அதனால், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் ஹீரோயின் சம்பந்தப்பட்ட கதை என்றால் மட்டும் வாருங்கள்... இல்லையேல் கிளம்புங்கள் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம். தற்போது ஒரு சில ஹீரோக்களுடன் நடித்து வந்தாலும், அந்த படங்களில் எல்லாம் நடித்து முடித்துவிட்டு, அதன்பிறகு தனது புதிய கண்டிஷன்படியே கதைகளை தேர்வு செய்யவுள்ளாராம்.
அதனால், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் ஹீரோயின் சம்பந்தப்பட்ட கதை என்றால் மட்டும் வாருங்கள்... இல்லையேல் கிளம்புங்கள் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம். தற்போது ஒரு சில ஹீரோக்களுடன் நடித்து வந்தாலும், அந்த படங்களில் எல்லாம் நடித்து முடித்துவிட்டு, அதன்பிறகு தனது புதிய கண்டிஷன்படியே கதைகளை தேர்வு செய்யவுள்ளாராம்.
அரசியல் காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த புயல் நடிகர், தற்போது சில படங்களில் பழைய மாதிரி காமெடி வேடத்தில் மட்டும் நடிக்க வாய்ப்பு வருகிறதாம்.
அரசியல் காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த புயல் நடிகர், தற்போது சில படங்களில் பழைய மாதிரி காமெடி வேடத்தில் மட்டும் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். இதனால் நடித்தால் ஹீரோ தான் என்ற முடிவை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, காமெடி வேடங்களிலும் நடிக்க ஓகே சொல்கிறாராம். ஆனால், தயாரிப்பாளர்களுக்கு ஷாக் தரும் வகையில் ஹீரோவாக நடிப்பதற்கு இணையான சம்பளம் கேட்கிறாராம். இதனால் புதிய வாய்ப்புகளுக்காக அவரை அணுகும் படக்குழுக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம்.






