என் மலர்
சினிமா செய்திகள்

மத வெறுப்பு பரவலுக்கு, நாம் இரையாகிவிடக்கூடாது- நடிகை ஆண்ட்ரியா
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை நினைத்து மனம் உடைந்துபோனேன்.
- இச்சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீர் மக்கள் இன்னும் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தும் மனம் உடைகிறது.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பலியாகினர். தங்கள் குடும்பத்தினர் குண்டு காயங்களுடன் தரையில் சரிந்து விழுந்ததைப் பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர்.
இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் நாட்டில் பிரிவுவாதம் அதிகரித்துவரும் இக்கட்டான இச்சூழலில், குறிப்பிட்ட மதம்/சமூக மக்களுக்கு எதிரான வெறுப்பு பரவலுக்கு, குடிமக்களான நாம் இரையாகிவிடாமல் இருக்க வேண்டும் என நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை நினைத்து மனம் உடைந்துபோனேன். மேலும், இச்சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீர் மக்கள் இன்னும் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தும் மனம் உடைகிறது. நாட்டில் பிரிவுவாதம் அதிகரித்துவரும் இக்கட்டான இச்சூழலில், குறிப்பிட்ட மதம்/சமூக மக்களுக்கு எதிரான வெறுப்பு பரவலுக்கு, குடிமக்களான நாம் இரையாகிவிடாமல் இருக்க வேண்டும்.
என ஆண்ட்ரியா கூறினார்.






