என் மலர்
சினிமா செய்திகள்

VIDEO: மலேசியாவில் ஒலித்த TVK... சிரித்தப்படி விஜய் செய்த செயல் வைரல்
- ஜன நாயகன் படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது.
- 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று கோலாகலமாக தொடங்கியது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெற்று வருகிறது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பங்கேற்றுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது. இசை வெளியிட்டு விழாவில் நடைபெறும் பல சுவாரஸ்சிய சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் விழாவிற்கு ரசிகர்கள் கரகோசத்துடன் நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார். அதன்பின்னர் விஜய் ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு சென்றார்.
இதனையடுத்து மேடையில் விஜய் நின்று கொண்டிருந்த போது ரசிகர்கள் TVK... TVK... என கோஷமிட்டனர். இதனை சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்த விஜய், ஒரு கட்டத்தில் இது அதற்கான மேடை இல்லை என்பது போல சைகை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






