'ஜன நாயகன்' படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல சேனல்

இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.
'ஜன நாயகன்' படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல சேனல்
Published on

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'மெர்சல்' படத்தையும் ஜீ தமிழ் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com