என் மலர்
சினிமா செய்திகள்

`நான் லேட்டா வர காரணம்...இதுதான்' - சிம்புவின் Thug பதில்
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'
- இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியிடப்பட்டது. பாடல் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. அதில் கமல் மற்றும் சிம்பு நடனமாடும் காட்சிகள் ஹைலைட்.
சமீபத்தில் நடந்த ப்ரோமோஷனுக்கான நேர்காணலில் படக்குழு கலந்துக் கொண்டனர் அதில் நடிகர் சிலம்பரசன் படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருவதைக் குறித்து கேள்வி எழுப்பினார் அதற்கு அவர் " என்ன நிறைய பேர் கேட்ட ஒரு கேள்வி மணி சார் திரைப்படத்திற்கு மட்டும் நீங்க லேட்டா போக மாட்டுறீங்க? அவரு ஸ்டிரிக்டா? இல்ல பயமா? என கேட்கின்றனர். எனக்கு மணி சார் மீது பயம் கிடையாது. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். நான் மணி சாரோட ஷூட்டுக்கு ஒரு நாளும் லேட்டா போனது கிடையாது. நான் ஒரு நடிகர் படத்தை நம்பி பலப்பேர் இருகின்றனர்.
முதலில் ஒரு இயக்குநர் படத்தை சொன்ன நேரத்தில் எடுக்க வேண்டும். முதலில் ஒரு இயக்குநர் நேரத்திற்கு வரணும், அவரு ஒழுங்கா வந்தா தான் மத்தவங்க எல்லாம் ஒழுங்கா வருவாங்க. முதலில் ஒரு கதையை சொன்னப்பிறகு ஆன் தி ஸ்பாட் வந்துவிட்டு அதை அப்படி எடுக்கலாமா இப்படி எடுக்கலாமா என்ற குழப்பம் இருக்க கூடாது அது மணி சாரிடம் என்றுமே இருந்தது இல்லை. எனக்கு மணி சார் மாதிரி இயக்குநர்கள் கிடைத்து இருந்தால் என் ரசிகர்கள் மிகவும் சந்தோஷமாக இருந்து இருப்பார்கள், இன்னும் அதிகம் திரைப்படம் நடித்து இருப்பேன். எனக்கு சினிமாவை விட்டா எதுவும் தெரியாது. இ லவ் சினிமா" என கூறியுள்ளார்.