என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அடுத்தடுத்து ரீ ரிலிஸ் ஆகும் விஜய் படங்கள்- தயாரிப்பாளர் அறிவிப்பு
    X

    அடுத்தடுத்து ரீ ரிலிஸ் ஆகும் விஜய் படங்கள்- தயாரிப்பாளர் அறிவிப்பு

    • கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' படம் ரீ ரிலிஸ் செய்ய உள்ளது.
    • 2005-ம் ஆண்டில் விஜய், அசின் நடிப்பில் வெளியான சிவகாசி ஆகிய படங்கள் ரீ ரிலிஸ் செய்ய உள்ளது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படம் மற்றும் 2005-ம் ஆண்டில் விஜய், அசின் நடிப்பில் வெளியான சிவகாசி ஆகிய படங்கள் ரீ ரிலிஸ் செய்ய உள்ளதாக படத்தில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.

    இவர் தயாரிப்பில் கடந்த ஆண்டு ரீ ரிலிஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த தமிழ்நாட்டின் முதல் படம் என்ற சாதனையை கில்லி படைத்தது. இந்திய அளவில் 2-வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×