என் மலர்

  சினிமா செய்திகள்

  எத்தனை முறை கத்தி சொன்னாலும் அது டாஸ்க் தான்.. அசீமுடன் மோதும் குயின்சி..
  X

  பிக்பாஸ் சீசன் 6

  எத்தனை முறை கத்தி சொன்னாலும் அது டாஸ்க் தான்.. அசீமுடன் மோதும் குயின்சி..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  • தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 நபர்கள் இருக்கின்றனர்.

  பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர்.


  பிக்பாஸ் சீசன் 6

  இதில் தற்போது 15 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 46-வது நாட்களை நெருங்கியுள்ளது. இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் உங்கள் தலையில் பிரச்சினை போல என்று விக்ரமன், ஜனனியை சுட்டிக்காட்டியது மிகுந்த மனவேதனையை அளித்தது என்று அசீம் ஜனனிகாக வாதாடுகிறார். இதற்கு விக்ரமன் அவர்கள் தமிழில் எனக்கு பிரச்சினை இல்லை எனக்கும் செந்தமிழ் பேசுவது தடுமாற்றம் தான் என்று கூறுகிறார்.


  பிக்பாஸ் சீசன் 6

  இதற்கு ஜனனி அவர் உங்கள் தமிழில் என்று கூறியது வருத்தத்திற்கு உள்ளானது என்று கூறுகிறார். இதற்கு உங்கள் தமிழ் என்று கூற முடியாது ஏனென்றால் டாஸ்கை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்று வாதிடுகிறார். இதற்கு அசீம் அவர்கள் தமிழ் வகுப்பு அப்போது தூங்கி விட்டார் போல என்று கூறுகிறார். இதனால் கடுப்பான குயின்சி எத்தனை முறை கத்தி சொன்னாலும் அது டாஸ்க் தான் என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  Next Story
  ×