என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்

உங்களுடைய பெஸ்ட் இது.. 'விக்ரம்' படத்தை பாராட்டிய மகேஷ் பாபு

- ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு பாராட்டியுள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
விக்ரம்
இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு விக்ரம் திரைப்படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ''விக்ரம்.. ப்ளாக் பஸ்டர் சினிமா! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உங்களுடன் இணைந்து விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த செயல்முறை குறித்து விவாதிக்க விரும்புகிறேன். சிறப்பான படைப்பு, விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் நடிப்பு திரையில் ஒளிர்கிறது. இதைவிட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியாது.
விக்ரம்
அனிருத் என்ன மாதிரியான ஒரு இசை. உங்களுடைய பெஸ்ட் இது. இறுதியாக கமல்ஹாசன் அவர்களின் நடிப்பு குறித்து கருத்து சொல்ல எனக்கு போதுமான தகுதியில்லை. உங்களின் மிகப்பெரிய ரசிகனான எனக்கு, இது பெருமையான தருணங்களில் ஒன்று! வாழ்த்துகள் சார் உங்களுக்கும் உங்கள் அருமையான குழுவிற்கும்!'' என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைராலகி வருகிறது.
#Vikram... Blockbuster Cinema!! A New-Age cult classic!! @Dir_Lokesh would love to catch up with you and discuss the entire process of Vikram! Mind-bending…Sensational stuff brother 👏👏👏
— Mahesh Babu (@urstrulyMahesh) July 2, 2022