என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சூர்யா - திரிஷா ஜோடி ?
- சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது
சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் சூர்யா வின் 45-வது திரைப்படமாகும் . இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனை படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்கிறார். இந்த கூட்டணி புதியதொரு கூட்டணியாக இருப்பதால் திரைப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படம் ஒரு தெய்வீக ஃபேன்டசி திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் நடிக்கவுள்ள கதாநாயகி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா 45 திரைப்படத்தின் நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
சூர்யா மற்றும் திரிஷா ஜோடியாக மௌனம் பேசியதே மற்றும் ஆறு திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் நடித்த இரு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்த தகவல் உண்மையெனில் இருவரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
சூர்யா 45 திரைப்படம் இயக்குவதற்கு முன் ஆர்.ஜே பாலாஜி திரிஷா நடிப்பில் மாசானியம்மன் திரைப்படத்தை இயக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 45 திரைப்படத்திற்கு கருப்பு என தலைப்பாக இருக்கும் என இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.