என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    டெல்லி பெல்லி ஞாபகம் இருக்கா?.. அமீர் கானின் ஹேப்பி படேல் டிரெய்லர்
    X

    'டெல்லி பெல்லி' ஞாபகம் இருக்கா?.. அமீர் கானின் 'ஹேப்பி படேல்' டிரெய்லர்

    • டெல்லி பெல்லி படத்தை இயக்கியவர் பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் வீர் தாஸ்.
    • அமீர் கான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வீர் தாஸ், 'ஹேப்பி படேல்: கதர்னக் ஜசூஸ்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

    தமிழில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி நடிப்பில் வெளியான 'சேட்டை' படத்தை யாராலும் மறந்துவிட முடியாது. இது இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த 'டெல்லி பெல்லி' படத்தின் ரிமேக் ஆகும்.

    இந்த டெல்லி பெல்லி படத்தில் நடித்தவர் பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் வீர் தாஸ். இந்நிலையில் அமீர் கான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வீர் தாஸ், 'ஹேப்பி படேல்: கதர்னக் ஜசூஸ்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

    வீர் தாஸுடன், மோனா சிங், மிதிலா பால்கர் மற்றும் ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    மேலும் இதில் டெல்லி பெல்லியல் நடித்த நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    எனவே நீண்ட வருடம் கழித்து டெல்லி பெல்லி கூட்டணியில் உருவாகி உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    இந்த படம் வரும் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

    இதில் அமீர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டெல்லி பெல்லியை போல நகைச்சுவை மற்றும் அதிரடி காட்சிகளுடன் ஹேப்பி படேல் டிரெய்லர் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

    Next Story
    ×