ராஷ்மிகா மந்தனா நடிக்கும் "The Girlfriend"- டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு

அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர்.
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் "The Girlfriend"- டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இதைதொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்றது.

இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார்.

அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நதியே மியூசிக் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில், தி கேர்ள் ஃபிரண்ட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அந்த வகையில், இப்படத்தின் டிரெய்லர் வரும் 25ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com