ஜனவரி 9-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகிறது 'மாஸ்க்'

இப்படத்தில் தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஜனவரி 9-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகிறது 'மாஸ்க்'
Published on: 

அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் 'மாஸ்க்'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் கடந்த மாதம் 21-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.8 கோடிக்கும் அதிகமான வசூலையும் குவித்தது.

இந்த நிலையில், 'மாஸ்க்' படத்தை வருகிற 9-ந்தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டு களிக்கலாம் என படக்குழு அறிவித்துள்ளது.  

X

Maalai Malar
www.maalaimalar.com