என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மீண்டும் Action அவதாரம் எடுக்கும் மம்மூட்டி.. Bazooka படத்துக்கு U/A 13+ சான்றிதழ்!
    X

    மீண்டும் Action அவதாரம் எடுக்கும் மம்மூட்டி.. Bazooka படத்துக்கு U/A 13+ சான்றிதழ்!

    • இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • படத்தின் முதல் பாடலான Loading Bazooka நேற்று வெளியானது.

    கடைசியாக கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

    படத்தின் முதல் பாடலான Loading Bazooka நேற்று வெளியானது. இந்நிலையில் இப்படத்துக்கு U/A 13+ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதை படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதன் பொருள் படம் திரையிட தகுதியானது, ஆனால் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோரின் வழிகாட்டுதலின் பேரிலேயே இப்படத்தை காட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×