என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    லோகேஷின் Signature Style: கூலி படத்தில் இடம் பிடித்த ரெட்ரோ பாடல் என்ன?
    X

    லோகேஷின் Signature Style: கூலி படத்தில் இடம் பிடித்த ரெட்ரோ பாடல் என்ன?

    • தனது கதை சொல்லும் பாணியில் மட்டும் இல்லாமல், அவர் வைத்திருக்கும் ஒரு தனி “சிக்னேச்சர்” இருக்கிறது
    • இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது கூலி

    தமிழ் சினிமாவில் ஸ்டைலான ஆக்ஷன், துல்லியமான திரைக்கதை, பார்வையாளர்களை கட்டிப்போடும் மாஸ் மொமென்ட்ஸ் என இவைகளை எல்லாம் ஒரே கையால் கலக்கக்கூடியவர் லோகேஷ் கனகராஜ்.

    தனது கதை சொல்லும் பாணியில் மட்டும் இல்லாமல், அவர் வைத்திருக்கும் ஒரு தனி "சிக்னேச்சர்" இருக்கிறது அது என்ன என்றால் அனைத்து படங்களிலும் ஒரு பழையப்பாடலை படத்தின் முக்கிய பகுதிகளில் வைத்திருப்பார் குறிப்பாக சண்டை காட்சிகளில். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

    ஒரு தீவிரமான சண்டைக்குள் திடீரென்று பழைய மெலடி அல்லது பீட்டுடன் கூடிய பாடல் ஒலிக்கும்போது, ரசிகர்கள் ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் கத்துவார்கள்.

    'கரு கரு கருப்பாயி' முதல் 'மெட்ரோ சேனல்' வரை என பல பாடல்கள் இவரது படத்தில் இடம் பெற்றுள்ளது.

    லோகேஷ் தனது படங்களில் உயிர் கொடுத்த சில பாடல்கள்:

    கரு கரு கருப்பாயி – லியோ திரைப்படம்

    தாமரை பூவுக்கும் – லியோ திரைப்படம்

    ஆசை அதிகம் – கைதி திரைப்படம்

    சக்கு சக்கு வத்திக்குச்சி – கைதி திரைப்படம்

    மெட்ரோ சேனல் , சாத்து நட சாத்து என பாடல்களை குறிப்பிடலாம்.

    அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் கூலி திரைப்படத்திலும் இதேப்போல் ஒரு விண்டேஜ் பாடல் அமைந்துள்ளது.

    பிரசாந்த் நடித்த கல்லூரி வாசல் படத்தில் அமைந்த லயோலா காலெஜ் லைலா என்ற பாடல் கூலி திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×