திரும்பிப்போற ஐடியாவே இல்ல.. I'M COMING..!- வெளியானது "ஜனநாயகன்" டிரெயிலர்

அனிருத் இசையில் இதுவரை வெளியான 4 பாடல்களும் செம்ம ஹிட்.
திரும்பிப்போற ஐடியாவே இல்ல.. I'M COMING..!- வெளியானது "ஜனநாயகன்"  டிரெயிலர்
Published on

'ஜனநாயகன்' நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் 69-வது படம் மற்றும் அவர் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக நடிக்கும் இறுதித் திரைப்படம் என்பதால் இது உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் இதுவரை வெளியான 4 பாடல்களும் செம்ம ஹிட். குறிப்பாக தளபதி கச்சேரி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று (ஜனவரி 2) வெளியான "ராவண மகண்டா" பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் டிரெயிலர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்ததைபோல், டிரெய்லரில் விஜய்யின் அரசியல் வருகை குறித்த மறைமுகமான வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com