என் மலர்
சினிமா செய்திகள்

One Last Time... ORU KUTTY STORY... என்ன பேசப் போகிறார் விஜய்?... உணர்ச்சி மிகுதியில் ரசிகர்கள்
- திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் மலேசியாவிற்கு படையெடுத்துள்ளதால் கோலாம்பூர் நகரமே களை கட்டியுள்ளது.
- விஜய் பேசிய வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெறுகிறது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் மலேசியாவிற்கு படையெடுத்துள்ளதால் கோலாம்பூர் நகரமே களை கட்டியுள்ளது.
இதனிடையே, 'ஜன நாயகன்' படம் விஜயின் கடைசி படம் என்று சொல்லப்படுவதால் இசை வெளியீட்டு விழாவில் அவர் சொல்லும் 'ஒரு குட்டி ஸ்டோரி'-க்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் 'One Last Time... ORU KUTTI STORY...' என்று விஜய் பேசிய வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.






