என் மலர்
சினிமா செய்திகள்

அது உதயநிதிக்கு ஓகே என்றால் கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன் - சந்தானம்
- நட்பு ரீதியாக என்னால் இதெல்லாம் பண்ண முடியும், முடியாது என்று இருக்கிறது.
- அது அவருக்கு ஒகே என்றால் கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன் என சந்தானம் கூறியுள்ளார்.
சந்தானம் நடிப்பில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் உருவாகியுள்ளது. நடிகர் ஆர்யா தயாரித்துள்ள இப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் சந்தானம் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2026 தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் அழைத்தால் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வீர்களா என சந்தானத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து சந்தானம் கூறியதாவது:-
நான் எப்போதும் ஒன்றுதான் சொல்வேன். நீங்கள் உழைத்தால் உங்களுக்கு சாப்பாடு, நான் உழைத்தால் தான் எனக்கு சாப்பாடு. இந்த படத்தில் சிம்பு என்னை நடிக்க அழைத்தாலும் அவர் மறுபடியும் பழைய மாதிரிதான் நான் நடிக்க வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தவில்லை. படத்தில் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்பதை அவர் பார்த்துக் கொண்டார்.
அதேபோல் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தால் நட்பு ரீதியாக என்னால் இதெல்லாம் பண்ண முடியும், முடியாது என்று இருக்கிறது.
உதயநிதி சார் அழைத்தால் என்னால் இதெல்லாம் முடியும், முடியாது என்று சொல்வேன். அது அவருக்கு ஒகே என்றால் கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன் என சந்தானம் கூறியுள்ளார்.






