என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    `பல்துறை வித்தகராக அவர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் - அஜித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
    X

    `பல்துறை வித்தகராக அவர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்' - அஜித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    • ஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
    • இன்று அஜித் அவரது 54-வது பிறந்தநாளை கொண்டாகிறார்.

    தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. இன்று அஜித் அவரது 54-வது பிறந்தநாளை கொண்டாகிறார். திரைப்பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் அதிமுக பொது செயலாளரான திரு.எடப்பாடி பழனிசாமி நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " தனித்தன்மை மிக்க நடிப்பாற்றலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள திரை ஆளுமை; கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் வடிவமைப்பு என பல துறைகளில் தனது திறமைகளைத் தொடர்ந்து வெளிக்காட்டி, பல சாதனைகளையும் புரிந்து வரும் அன்புச் சகோதரர் "பத்ம பூஷன்" திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! பல்துறை வித்தகராக அவர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்." என பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×