என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தக் லைஃப் படத்தில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஒரு பாசிட்டிவ், கிரே ஷேட் இருக்கு- திரிஷா
    X

    "தக் லைஃப்" படத்தில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஒரு பாசிட்டிவ், கிரே ஷேட் இருக்கு- திரிஷா

    • இத்தனை லெஜெண்ட்ஸ் உடன் இந்த மேடையை பகிர்வதில் மகிழ்ச்சி.
    • டிரெயிலருக்கு பிறகு நிறைய பேருக்கு என்னுடைய கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுந்தது.

    சென்னையில் நடைபெற்று வரும் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ள நடிகை திரிஷா பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் இருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. கவுரவமாக உணர்கிறேன். இந்த படத்தில் 3 பாடல்கள் படப்பிடிப்பில் நான் இருக்கிறேன் என்பதால், பாடல்களை முன்கூட்டியே கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது.

    நாயகன் படத்திற்கு பிறகு கமல் சாரும், மணி சாரும் எப்போது மீண்டும் இணைவார்களா என்று 37 வருடங்களாக நானும் உங்களைப் போன்று காத்துக்கிடந்தேன்.

    நிறைய இடங்களில் இதை நான் சொல்லி இருக்கிறேன். மணி சாருடன் நான்கு படங்களிலும், கமல் சாருடன் நான்கு படங்களிலும், ஏர்.ஆர். ரகுமான் சாருடன் 4 படங்கள் என என்னுடைய கனவு நிஜமாகியுள்ளது.

    சினிமாவின் மாணவன் நான் என்று கமல் சார் அடிக்கடி கூறுவார். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.

    தக் லைஃப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நான் சரியா வருவேனா என மணி சாருக்கும் எனக்கும் சந்தேகம் இருந்தது. ஏனென்றால், இது குந்தவை கதாப்பாத்திரத்திற்கு எதிரானது.

    இத்தனை லெஜெண்ட்ஸ் உடன் இந்த மேடையை பகிர்வதில் மகிழ்ச்சி.

    விடிவிக்கு பிறகு சிம்புவுடன் நடித்துள்ளேன், ஜூன் 5ம் தேதி போய் தியேட்டரில் பாருங்கள். டிரெயிலருக்கு பிறகு நிறைய பேருக்கு என்னுடைய கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுந்தது.

    2 நிமிடங்கள் டிரெயிலர் பாத்திருப்பீங்க, 2 மணி நேர படத்திற்கு பிறகு புரியும் இந்த படம் என்னவென்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×