என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சுயமரியாதையை மட்டும் இழக்காதீர்கள் - பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் ரவிமோகன் பேச்சு
    X

    சுயமரியாதையை மட்டும் இழக்காதீர்கள் - பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் ரவிமோகன் பேச்சு

    • பராசக்தி படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

    இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். மொழிப் போராட்ட பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், "ஜனவரி 10-ம் தேதி 'பராசக்தி' படம் வருது, அதையும் செலிப்ரேட் பண்ணுங்க. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது அண்ணன் - தம்பி பொங்கல் தான்" என்று தெரிவித்தார்.

    இதையடுத்து பேசிய ரவி மோகன், "பராசக்தி சுயமரியாதையை காப்பாற்றும் படம். நானும் என்னுடைய சுயமரியாதையை காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறேன். முதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. கண்ணுக்கு தெரிபவர்களை பற்றிதான் கவலை. அனைவருக்கும் ஒரு அண்ணனாக சொல்கிறேன், சுயமரியாதையை மட்டும் யாரும் இழக்காதீர்கள்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×