என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தலைவன் இறங்கி சரிதம் எழுதவே- கூலி படத்தின் முதல் நாள் வசூல் விவரம்
    X

    தலைவன் இறங்கி சரிதம் எழுதவே- கூலி படத்தின் முதல் நாள் வசூல் விவரம்

    • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
    • திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு மகிழ்ந்தனர்.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் நேற்று வெளியானது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் ரசிகர்கள் திரையரங்கை அதிரவிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பல்வேறு திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு மகிழ்ந்தனர்.

    இந்த வார இறுதிவரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் மிக வேகமாக 3 மில்லியன் டாலர்கள் வசூலித்த ஒரு தமிழ் திரைப்படம் என்ற அங்கீகாரத்தை கூலி கைப்பற்றியுள்ளது. மேலும் உலகளவில் முதல் நாள் வசூல் 170 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

    Next Story
    ×