வட இந்தியாவில் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: ரசிகர்கள் உற்சாகம்

கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. தமிழகம், கேரளாவில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
வட இந்தியாவில் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: ரசிகர்கள் உற்சாகம்
Published on

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.

படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடி புக்கிங்ஸ் நடந்து வருகிறது. படத்தின் பிரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்கா நாட்டில் 50,000-க்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் நேற்று டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர் வாசலில் வரிசையில் நின்று அடித்து பிடித்து டிக்கெட் புக் செய்தனர். இதேபோல், தமிழ்நாட்டிலும் டிக்கெட் முன்பதிவு நேற்று இரவு தொடங்கியது. ரசிகர்கள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவிலும் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இப்படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com