என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அரசன் படப்பிடிப்பு தளத்தில்... சிம்புவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரசிகர்கள்
    X

    'அரசன்' படப்பிடிப்பு தளத்தில்... சிம்புவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரசிகர்கள்

    • அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அரசன்'. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது, ரேஸிங் களத்தில் அஜித்குமாருடன் சிம்பு எடுத்த புகைப்படத்தை பிரேம் செய்து சிம்புவிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்கினர்.

    அண்மையில் மலேசியா சென்ற சிம்பு அங்கு ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×