என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
சிவா இயக்கத்தில் விஜய்? எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
Byமாலை மலர்3 Jun 2022 12:30 PM GMT (Updated: 3 Jun 2022 12:30 PM GMT)
இயக்குனர் சிவா தனது அடுத்த படத்தை விஜய்யை வைத்து இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் பல படங்களை இயக்கியதை அடுத்து கார்த்திக் நடித்த சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் சிவா. இதை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
சிவா - விஜய்
தற்போது, இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகர் விஜய்யை சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின் போது தனக்கு ஒரு கதை தயார் செய்யுமாறு விஜய், சிவாவிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் விஜய்யின் 68-வது படத்தை சிவா இயக்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
Next Story
×