என் மலர்

  சினிமா செய்திகள்

  சிவகார்த்திகேயன்
  X
  சிவகார்த்திகேயன்

  ரஜினி தான் ரியல் டான் - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சிவகார்த்திகேயனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்த இப்படத்தை லைகா நிறுவனமும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். 

  இந்த திரைப்படம் கடந்த மே 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியிலும் வெற்றியை பெற்றது. இப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

  ரஜினிகாந்த் - சிவகார்த்திகேயன்
  ரஜினிகாந்த் - சிவகார்த்திகேயன்

  இந்நிலையில் டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு ஏற்கனவே டான் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ரஜினிகாந்த் தற்போது சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், அதனுடன் அந்த சந்திப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது, “இந்திய சினிமாவின் "டான்" ரஜினிகாந்த் சாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவரை சந்தித்த அந்த 60 நிமிடங்கள் என் வாழ்நாள் நினைவாக இருக்கும். உங்கள் நேரத்திற்கும் டான் படத்திற்கான உங்கள் மதிப்பு மிக்க பாராட்டிற்கும் நன்றி தலைவா” என்று பதிவிட்டிருக்கிறார். சிவகார்த்திகேயனின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


  Next Story
  ×