என் மலர்
சினிமா

தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி
உணவின்றி தவித்த குரங்குகளின் பசி, தாகத்தைப் போக்கிய விஜய் ரசிகர்கள்
குரங்குகள் கஷ்டப்படுவதை அறிந்த புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர், அவற்றின் தாகத்தைப் போக்க தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன. அந்த வழியாக வாகனத்தில் செல்பவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் தினம்தோறும் அங்குள்ள குரங்குகளுக்கு உணவு, பழங்கள் போன்றவற்றை வழங்கி வந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அங்குள்ள குரங்குகள் தண்ணீர் மற்றும் உணவு இன்றி தவித்து வந்தன.

விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கிய பழங்களை உண்ணும் குரங்குகள்
இந்நிலையில், குரங்குகள் கஷ்டப்படுவதை அறிந்த புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர், அந்தக் கோவில் அருகே தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்துள்ளனர். மேலும் அந்த தண்ணீர் தொட்டி அருகே பழங்கள், உணவுகளை வைப்பதற்கு ஒரு மேடையும் அமைத்து, அதன்மூலம் குரங்குகளுக்கு தினந்தோறும் தண்ணீர், உணவுப் பொருட்கள் மற்றும் பழங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கி வருகின்றனர். அவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Next Story






