என் மலர்
சினிமா

நடிகர்கள் கருணாகரன், விஜய்
விஜய்யின் சம்பளம் பற்றி கருணாகரன் கிண்டல் செய்தாரா?
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அதிக சம்பளம் வாங்குவதை நடிகர் கருணாகரன் கிண்டல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் அரசுக்கு 1.30 கோடியும், ரசிகர் மன்றங்களுக்கு 50 லட்சமும் நிதி உதவி செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் கஷ்டப்படும் விஜய் ரசிகர்கள் குடும்பத்திற்கு தலா 5,000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நிதி உதவி செய்த ஒரே நடிகர் என்ற பெயரையும் பெற்று இருக்கிறார். இதனால் அனைத்து மாநில முதலமைச்சர்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாண்டிச்சேரி மாநிலத்திற்கு 5 லட்சம் அனுப்பிய விஜய்யை அதன் முதலமைச்சர் பாராட்டி வீடியோ வெளியிட்டிருந்தார்.
மேலும் அனைத்து நடிகர்களும் இதுபோன்று உதவ முன்வர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு நடிகர் கருணாகரன், விஜய்யை போல் எங்களுக்கும் சம்பளம் கொடுங்கள் நாங்களும் செய்கிறோம் என்பதைப்போல கிண்டலாக தனது பதிவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனால் கருணாகரனை விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் கருணாகரன் டிவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவை கருணாகரன் தான் செய்தாரா இல்லை அவரது பெயரில் போட்டோ ஷாப் ஒர்க் செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.

Next Story