search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    டெடி பட போஸ்டர்
    X
    டெடி பட போஸ்டர்

    டெடி படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்

    சக்தி சவுந்தரராஜன்-ஆர்யா கூட்டணியில் உருவாகும் ’டெடி’ படம் மூலம் பிரபல இயக்குனர் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
    தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற வித்தியாசமான கதை களம் கொண்ட படங்களை இயக்கி புகழ் பெற்றவர் மகிழ்திருமேனி. இவர் தற்போது நடிகராக அறிமுகமாகி உள்ளார். ஆர்யா நடிப்பில் உருவாகும் டெடி படத்தில் மகிழ்திருமேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ளார். 

    ஆர்யா, மகிழ்திருமேனி, சக்தி சவுந்தரராஜன்

    இந்த படத்தில் சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சயிஷா நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×