என் மலர்
சினிமா

சல்மான் கான் - விஜய்
விஜய்யின் அந்த இரண்டு படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் - சல்மான் கான்
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், விஜய் நடிப்பில் வெளியான அந்த இரண்டு படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.
சல்மான் கான் நடிப்பில் தற்போது தபாங் 3 திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபுதேவா இயக்கி இருக்கும் இப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில், சல்மான் கானிடம் விஜய்யின் போக்கிரி ரீமேக் படத்தில் நீங்கள் நடித்தீர்கள். தற்போது விஜய்யின் எந்த படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு சல்மான் கான், விஜய்யின் ‘திருப்பாச்சி’ மற்றும் ‘தெறி’ படம் பார்த்தேன் எனக்கு பிடித்திருக்கிறது’ என்றார்.
அனேகமாக இந்த இரண்டு படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டால் சல்மான் கான் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கலாம்.
Next Story






