search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய், விஜய் சேதுபதி
    X
    விஜய், விஜய் சேதுபதி

    விஜய் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கிய விஜய் சேதுபதி?

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படத்திற்கு விஜய் சேதுபதி கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகர் விஜய்யின் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி உள்ள "பிகில்" திரைப்படம் தீபாவளி அன்று வெளிவர உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, நடிகர் விஜய் தனது  64-வது திரைப்படத்தில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைக்கோர்க்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 3-ந் தேதி தொடங்க உள்ளது.

    2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இத்திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் 64-வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் இது தொடர்பாக படத்தின் இயக்குனர் விஜய் சேதுபதியை அணுகியதாக கூறப்பட்டது.

    விஜய், விஜய் சேதுபதி

    எனினும் கால்ஷீட்டை பொறுத்து படத்தில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது விஜய் சேதுபதி தளபதி 64 படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டிசம்பர் மாதம் விஜய் சேதுபதி இப்படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என கூறப்படுகிறது.

    இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக "பேட்ட" திரைப்படத்தில்  விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×