என் மலர்tooltip icon

    சினிமா

    தர்பார் பட போஸ்டர்
    X
    தர்பார் பட போஸ்டர்

    ‘தர்பார்’ பட பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் பாடல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

    இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ரஜினியுடன் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

    எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரஜினிகாந்த்

    இந்நிலையில், இப்படத்தின் ஓப்பனிங் பாடலை தான் பாடியுள்ளதாக  எஸ்.பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தெரிவித்தார். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என அவர் கூறியுள்ளார்.

    அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    Next Story
    ×